[X] Close

ஜெயலலிதாவை அரசியலுக்கு முழுக்கு போடவிடாமல் தடுத்த நடராஜன்


m-natarajan-the-man-who-prevented-jayalalithaa-from-quitting-politics

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Mar, 2018 11:04 am
  • அ+ அ-

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் கணவர் ம.நடராஜான் காலமானார். நடராஜனை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் எப்போதுமே இருந்துவந்தன. 


ஆனால், இதே நடராஜன்தான் ஜெயலலிதாவை ஒரு காலகட்டத்தில், அவரது அரசியல் வாழ்க்கைக்கு முழுக்கு போடாமல் தடுத்தவர் என்பது தெரியுமா?


1989-ல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா, தான் தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாகவும் அரசியலுக்கு முழுக்கு போடுவதாகவும் சபாநாயகருக்கு கடிதம் எழுதினார்.
ஆனால், போயஸ் தோட்டத்திலிருந்த நடராஜனின் விசுவாசிகள் சிலர் ஜெயலலிதாவின் அந்தக் கடிதம் குறித்து அவருக்குத் தெரியப்படுத்தினர். அந்தக் கடிதத்தைக் கைப்பற்றிய நடராஜன் அதை அவர் வீட்டிற்கு கொண்டு சென்றுவிட்டார்.
அப்போது ஆட்சியிலிருந்த திமுக அரசு நடராஜனின் வீட்டில் ரெய்டு ஒன்றை நடத்தியது. தேனி ஈஸ்வரன் அளித்த புகாரின்பேரில் அந்த ரெய்டு நடத்தப்பட்டது. தேனி ஈஸ்வரனும் 1989 தேர்தலில் போட்டியிட்ட சிலரும் ஜெயலலிதாவின் அந்தக் கடிதத்தைக் கைப்பற்றி அதை ஊடகங்களில் வெளியிட்டனர். அதன் பின்னர் நடந்த அரசியல் நிகழ்வுகள் நடராஜனின் அரசியல் முக்கியத்துவத்தை உணர்த்தியது.


நடராஜன் வெளியே.. ஜெ. உள்ளே..
ஜெயலலிதாவின் கடலூர் பொதுக்கூட்டத்தை படம் பிடிக்கும் வாய்ப்பு நடராஜன் - சசிகலா தம்பதியினருக்குக் கிடைத்தது. அதன் மூலம் அவர்களுக்கு ஜெயலலிதாவை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஜெயலலிதாவுடன் சசிகலா, நடராஜன் தம்பதியினருக்கு மிக நெருக்கமான நட்பு ஏற்பட்டது.
ஆரம்ப காலக்கட்டத்தில் போயஸ் தோட்ட இல்லத்தில்தான் நடராஜன், சசிகலா தங்கியிருந்தனர். அந்தவேளையில்தான் நடராஜன் ஜெயலலிதாவை ஆட்டிப்படைப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து ஜெயலலிதா ஒரு அறிக்கையை வெளியிட்டார். தான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என்றும் 1989 முதலே சசிகலா, நடராஜன் தம்பதியினர் தனக்கு அறிமுகம் என்று குறிப்பிட்டார்.
ஆனால், கட்சிக்காரர்களுக்கு ஜெயலலிதா அனுப்பிய சுற்றறிக்கையில் ம.நடராஜனுடனான தொடர்பை கட்சியினர் துண்டித்துக்கொள்ளுமாறு கூறினார். போயஸ் தோட்ட இல்லத்திலிருந்தும் வெளியேற்றினார். சசிகலா மட்டும் போயஸ் தோட்டத்திலேயே தங்கினார்.


 2011-ல் ஜெயலலிதா சசிகலாவையும் மேலும் 11 பேரையும் வீட்டிலிருந்து வெளியேற்றினர். ஆனால், மன்னிப்புக் கடிதம் அளித்ததோடு ம.நடராஜனுடன் இனி எவ்வித தொடர்பும் இருக்காது என்பதை உறுதிப்படுத்தியும் சசிகலா மீண்டும் போயஸ் தோட்டத்துக்குள் நுழைந்தார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close