[X] Close

யார் இந்த நடராஜன்?


who-is-this-m-natarajan

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Mar, 2018 06:34 am
  • அ+ அ-

தஞ்சாவூர் மாவட்டம் விளார் கிராமத்தித்தில் 1943-ல் மருதப்பனுக்கு பிறந்தார் நடராஜன். 1967-ல் மாணவராக இருந்தபோது இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார். அரசு அதிகாரியாக இருந்த ம.நடராஜன் மக்கள் தொடர்பு அதிகாரி ஆனார். திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்தார். கவிஞர் நா.காமராசருடன் இணைந்து சாதி ஒழிப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டார். திமுக தலைவரும் அப்போதைய முதல்வருமான கருணாநிதி தலைமையில் நடராஜன் - சசிகலாவுக்கு திருமணம் நடந்தது.

கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சந்திரலேகா ஐ.ஏ.எஸ். மூலமே அவருக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் அறிமுகம் கிடைத்தது.

நடராஜனின் மூலமாகவே சசிகலாவுக்கு ஜெயலலிதாவின் அறிமுகம் கிடைத்தது. 

அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் சுற்றுப் பயணங்களை படமெடுத்துக் கொடுக்கும் வாய்ப்பு சசிகலாவின் வினோத் வீடியோ விஷனுக்குக் கிடைக்க, ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்குள் அடியெடுத்து வைத்தார் சசிகலா.

அதற்குப் பிறகு, மெல்ல மெல்ல ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவராக வளர ஆரம்பித்தார். ஜெயலலிதா மாநிலங்களவை உறுப்பினரானபோது, அவரோடு டெல்லி செல்லும் அளவுக்கு நெருக்கமானார்.
எம்ஜிஆர் மறைந்தபோது, கட்சி இரண்டாக உடைந்த சமயத்தில், சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் ஜெயலலிதாவுக்குப் பின்னால் அணி திரண்டனர்.

ஜெ.,வால் ஓரங்கட்டப்பட்ட நடராஜன்:

வெகுவாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தைச் சார்ந்திருப்பவராக மாறினார் ஜெயலலிதா. இதை சாதகமாக்கிக்கொண்டார் சசிகலாவின் கணவர் ம.நடராஜன். ஆனால், அவரை நெருங்கவிடாமல் சற்று தொலைவிலேயே வைத்திருந்தார் ஜெயலலிதா.

இதன் பின்னர், ம.நடராஜன் புதிய பார்வை என்ற இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவரது உயிர் இன்று பிரிந்தது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close