[X] Close

எந்த புது தோசையையும் சந்திரபாபு நாயுடு சுடவில்லை!- ஸ்டாலினுடனான சந்திப்பை கலாய்த்த தமிழிசை


tamilisai-slams-chandrababu-naidu-stalin-visit

படம்: எல்.சீனிவாசன்

  • பாரதி ஆனந்த்
  • Posted: 10 Nov, 2018 10:57 am
  • அ+ அ-

எந்த புது தோசையையும் சந்திரபாபு நாயுடு சுடவில்லை; ஸ்டாலின் மகிழத் தேவையில்லை என இருவரின் சந்திப்பு குறித்து கிண்டலாக ட்வீட் செய்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை மாலை சென்னையில் சந்தித்தார். இச்சந்திப்பு முடிந்தவுடன் ”பாஜக அரசை அகற்ற அனைத்து மாநிலத் தலைவர்களும் இணைய உள்ளோம்” என்று கூட்டாக பேட்டியளித்தனர். 

இருவரும் பேட்டியளித்த சில மணித்துளிகளில் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியிருப்பதாவது:

சந்திரபாபுநாயுடு, ஸ்டாலினைச் சந்தித்துவிட்டார், அதற்கு முன்னால் தேவகவுடாவைச் சந்தித்துவிட்டார், ராகுலைச் சந்தித்துவிட்டார்.. மிகப்பெரிய கூட்டணியை அமைத்துவிட்டார் என்கின்றனர். எந்த புது தோசையையும் சுடவில்லை, ஏற்கனவே எதிரணியாக இருக்கும் ஒருதோசையை பிய்த்து பிய்த்து சாப்பிடுகிறார் அவ்வளவுதான். 

4 ஆண்டுகளுக்கு மேலாக ஜனநாயக கூட்டணியில் இருந்தவர் வரவு செலவுக்காக புது கூட்டணி தேடிவருகிறார். ஏற்கனவே பழக்கப்பட்ட 4 ஆண்டு சாப்பிட்டு விட்டு ,பிடிக்கவில்லை என சொல்லி புது ஓட்டல் தேடுகிறார்? ஒரு டீக்கடையில் பாக்கி வைத்துவிட்டு அடுத்த டீக்கடைக்கு போவதைப்போல் ஸ்டாலின் மகிழ ஒன்றுமில்லை.

ஜனநாயகத்தைக் காப்பாற்றப் போகிறேன். பத்திரிகை சுதந்திரத்தைப் பறிப்பவர்களை எதிர்க்கிறேன் என்று சொல்கிறார் சந்திரபாபுநாயுடு. அவசரநிலைப் பிரகடனப்படுத்தி ஜனநாயகத்தைக் கொன்று பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கிய காங்கிரசுடன் இருந்துகொண்டு சொல்வது மிகப்பெரிய வேடிக்கை"

இவ்வாறு தமிழிசை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close