[X] Close

சர்கார் சர்ச்சை: இப்படி ஒரு அரசு, இருக்கக் கூடாது - ஜெ.அன்பழகன் கருத்து


j-anbhazhagan-tweets-in-support-of-sarkar

  • kamadenu
  • Posted: 09 Nov, 2018 12:24 pm
  • அ+ அ-

சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய அரசே, அதை மீறுகிறது. இப்படிப்பட்ட அரசு பதவியில் இருக்கக்கூடாது என திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் கருத்து தெரிவித்துள்ளார்.

அரசுக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றுள்ளதால் விஜய் நடித்த சர்கார் படத்துக்கு தமிழகம் முழுவதும் ஆளும் கட்சி சார்பில் கடும் நெருக்கடி தரப்பட்டு வருகிறது. படத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வசனங்களையும், காட்சிகளையும் நீக்குவதாக, சன் பிக்சர்ஸ் தரப்பு அறிவித்துள்ளதாகத் தெரிகிறது.

படத்துக்கு உருவாகியுள்ள எதிர்ப்பு குறித்து, திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன், "திரைப்படங்களில் அரசியல் கருத்து வெளிப்பட்டிருந்தால் ஆட்சியாளர்களும், சம்பந்தப்பட்டவர்களும் மக்களிடம் விளக்கம் அளித்திருக்க வேண்டும், அதைவிடுத்து சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய அரசு, சட்ட ஒழுங்கை மீறுவதென்பது ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல. 

சர்கார் திரையிடப்பட்ட தமிழக திரையரங்குகளில் பேனர் கிழிப்பதும், அடித்து நொறுக்குவதும், ரசிகர்களை தாக்குவதையும் பார்த்தால் இது ஒரு சர்வாதிகார நாடு போல் உள்ளது. ஆகவே இப்படிப்பட்ட ஒரு அரசு தமிழகத்தில் ஒரு நிமிடம் கூட பதவியில் இருக்கக்கூடாது. தமிழக கவர்னர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு திரையரங்குகளையும், ரசிகர்களையும் பாதுகாக்க வேண்டும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close