[X] Close

தமிழகம் ஏன் அமைதிப் பூங்காவாக இருக்கிறது?- பேரவையில் முதல்வர் பட்டியல்


tn-cm-speech-in-assemly

  • பாரதி ஆனந்த்
  • Posted: 19 Mar, 2018 14:41 pm
  • அ+ அ-

இந்திய அளவில் உள்ள பெரிய மாநிலங்களில் பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.


இது தொடர்பாக அவையில் அவர் ஆற்றிய உரை:
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிக சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதன் காரணமாக தான் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, அகில இந்திய அளவில் உள்ள பெரிய மாநிலங்களில் பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
· இந்தியாவிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான பெரு நகரங்களில் கோயம்புத்தூர் முதலாவதாகவும், மெட்ரோ நகரங்களில் சென்னை மாநகரம்
முதலாவதாகவும் உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
· கடந்த 2016ஆம் ஆண்டு பெண்களுக்கெதிரான மொத்த குற்றங்களின் தமிழ்நாட்டின் குற்ற விகிதம் 10.7 ஆகும். இதனை தேசிய சராசரி ஆன 51.4 சதவிகிதத்துடன் ஒப்பிடும் போது 40.7 புள்ளிகள் குறைவாக உள்ளன.
சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சிறப்பாக உள்ளது என்பதற்கான புள்ளி விவரம்.
அதேபோல், இந்திய தர நிர்ணய குழு, ஒன்றல்ல, இரண்டல்ல, 80 பல்வேறு விதமான காரணிகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் அளித்து, இந்தியாவிலுள்ள 15,000க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில், மிகச்சிறந்த 10 காவல் நிலையங்களை தேர்ந்தெடுத்தது. அதில் இந்தியாவிலேயே கோவை மாநகரிலுள்ள ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் முதல் காவல் நிலையமாகவும், சென்னை மாநகரிலுள்ள அண்ணா நகர் காவல் நிலையம் 5வது காவல் நிலையமாகவும் தேர்வு செய்யப்பட்டு, விருதுகள் பெற்றுள்ளன.
· மகளிர் துயர் துடைக்கவும், அவர்களுடைய புகார்களுக்கு பிரத்யேகமாக தீர்வு காணும் பொருட்டும், நாட்டிலேயே அதிகபட்சமாக பெண்களுக்கென்று 200 காவல் நிலையங்கள் திறக்கப்பட்டு,
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் ஒட்டு மொத்த எண்ணிக்கையில், 40 விழுக்காடு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் நமது மாநிலத்தில்தான் உள்ளன.
மேலும், நாட்டிலேயே அதிக காவல் நிலையங்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடு. 1832 காவல்நிலையங்களை கொண்டு, முதலாவதாக தமிழ்நாடு விளங்குகிறது. பரப்பிலும், மக்கள் தொகையிலும், தமிழ்நாட்டைவிட அதிகமுள்ள உத்தர பிரதேச மாநிலம், 1525 காவல் நிலையங்களை கொண்டு, இரண்டாம் இடத்தில்தான் உள்ளது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.
· தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுவாரியம், கடந்த ஓராண்டில் மட்டும் 12 ஆயிரத்து 535 இரண்டாம் நிலைக்காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
· கடந்த வருடம், மொத்தம் 21 ஆயிரத்து 919 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
· இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாடு காவல்துறையில் தான் திருநங்கைகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
· 33 துணை காவல் கண்காணிப்பாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
· காவல் துறையில், முதல்நிலைக் காவலர் முதல் காவல் துறை இயக்குநர் வரையிலான பல்வேறு பதவிகளில் மொத்தம் 5,235 பணியிடங்கள் பதவி உயர்வுகள் மூலம் நிரப்பபட்டுள்ளன.
கடந்த ஆண்டு 244.32 கோடி ரூபாய் செலவில் 2,047 காவலர் குடியிருப்புகளும், 51.53 கோடி ரூபாய் செலவில் 85 காவல் நிலையங்களும், 83.85 கோடி ரூபாய் செலவில் 56 இதர காவல் துறை கட்டடங்களும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஆகவே, பணியிடங்கள் எல்லாம் நிரப்பப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. பணியிடங்கள் பெரும்பாலும் நிரப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் பணியிடங்கள் காலியாகின்றன. அந்த காலி பணியிடங்கள் எல்லாம் ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close