[X] Close

அதை மட்டும் விஜய் வீதியில் இறங்கி சொன்னால் நான் அவருக்கு அடிமையாகிறேன்!- அமைச்சர் சவால்


minister-challenges-vijay

  • பாரதி ஆனந்த்
  • Posted: 09 Nov, 2018 10:16 am
  • அ+ அ-

சர்கார் பட சர்ச்சை பூதாகரமாகியுள்ள நிலையில் விலையில்லா அரிசி தேவையற்றது என விஜய் திரையில் விமர்சிக்காமல் தெருவில் இறங்கி விமர்சித்தால் தான் அவருக்கு அடிமையாகிவிடுவதாக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சவால் விடுத்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘சர்கார்’. இப்படம் வெளியானவுடன் அதிமுகவினர் சில காட்சிகளுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். இது பெரும் சர்ச்சையாக உருவானதைத் தொடர்ந்து, படக்குழுவினர் அக்காட்சிகளை நீக்க ஒப்புக் கொண்டனர்.

இந்நிலையில், சர்கார் சர்ச்சை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், "அனைவரும் சமநிலை பெற வேண்டும் என்று எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கொண்டுவந்த விலையில்லா பொருட்கள் வழங்கும் திட்டங்களை விஜய் இழிவுபடுத்தியிருக்கிறார்.

20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. இதை விஜய் திரையில் விமர்சிக்காமல் வீதியில் இறங்கிவந்து விமர்சித்துவிட்டு சென்றுவிட முடியுமா? அப்படி அவர் விமர்சித்துவிட்டால் நான் விஜய்க்கும் அடிமையாகி பணிவிடை செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close