[X] Close

ஹாட்லீக்ஸ் : தேவர் ஜெயந்தி... டிடிவி தனி ரூட்டு!


hot-leaks-devar-jeyanthi

  • kamadenu
  • Posted: 04 Nov, 2018 10:51 am
  • அ+ அ-

தேவர் ஜெயந்திக்காக மதுரையிலிருந்து பசும்பொன் வந்த ஈபிஎஸ், ஓபிஎஸ் வகையறாக்களை வரவேற்று பசும்பொன் செல்லும் வழியில் வைக்கப்பட்டிருந்த ஃப்ளெக்ஸ் பேனர்களை ஒரு கும்பல் திட்டமிட்டுக் கிழித்து துவம்சம் செய்தது.

இதையெல்லாம் போலீஸும் கண்டும் காணாமல் இருந்துவிட்டது. பசும்பொன் செல்வதற்கு அதிமுக-வுக்கும் திமுக-வுக்கும் தலா 70 வாகனங்களுக்கு அனுமதி வழங்கியிருந்ததாம் போலீஸ். 

அதேபோல் தங்களுக்கும் வழங்க வேண்டும் என தினகரன் தரப்பில் கேட்டபோது, “அப்படியெல்லாம் அனுமதி தரமுடியாது. பத்து வண்டிகளுக்கு மட்டுமே அனுமதி” என்று போலீஸ் தரப்பில் சொல்லிவிட்டார்களாம். 

இதையடுத்து, தேவர் மற்றும் முக்குலத்தோர் அமைப்புகளின் பெயரில் ஒரு அமைப்புக்கு தலா பத்து வாகனங்கள் வீதம் 120 வாகனங்களுக்கு குறுக்கு வழியில் அனுமதி வாங்கி அத்தனை கார்களிலும் அமமுக கொடிகளைக் கட்டி தினகரன் கான்வாயில் பசும்பொன்னுக்கு பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தி இருக்கிறார்கள். 

இதற்கெல்லாம் யார் தலை உருளப் போகிறதோ தெரியவில்லை!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close