[X] Close

ஹாட்லீக்ஸ் : வைரமுத்துவுடன் விஜயபாஸ்கர் இணக்கம்! எப்படி இருந்தவங்க இப்படி மாறிட்டாங்க!


hot-leaks-vijayabaskar

அமைச்சர் விஜயபாஸ்கர்

  • kamadenu
  • Posted: 01 Nov, 2018 11:51 am
  • அ+ அ-

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளர் வைரமுத்துவும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் ஒரு காலத்தில் கீரியும் பாம்புமாய் நின்றார்கள். 

கடந்த சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருவாரியான தொகுதிகளில் அதிமுக தோற்றது. திருமயத்தில் போட்டியிட்ட வைரமுத்துவும் தோற்கடிக்கப்பட்டார். 

இதன் பின்னணியில் இருந்தவர் அப்போது மாவட்டச் செயலாளராக இருந்த விஜயபாஸ்கர்தான் எனக் குற்றம்சாட்டப்பட்டது. 

இதையடுத்து, விஜயபாஸ்கரை பொறுப்பிலிருந்து விடுவித்து வைரமுத்துவை மாவட்டச் செயலாளராக்கினார் ஜெயலலிதா. 

அப்படி இருந்த விஜயபாஸ்கரும் வைரமுத்துவும் இப்போது நகமும் சதையுமாகிவிட்டார்கள். 

கடந்த வாரம் வைரமுத்து மகளுக்குத் திருமணம். இதற்கான அனைத்துப் பொறுப்புகளையும் ‘ஏற்று’க்கொண்ட விஜயபாஸ்கர், முதல்வரையும் துணை முதல்வரையும் திருமணத்துக்கு வரவழைத்து வைரமுத்துவை திக்குமுக்காடவைத்துவிட்டாராம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close