[X] Close

ராஜாஜியை ஏன் சங்கப் பரிவாரங்கள் கொண்டாடுவதில்லை?- விசிக


ravikumar-on-statue-of-unity

  • பாரதி ஆனந்த்
  • Posted: 01 Nov, 2018 11:38 am
  • அ+ அ-

ராஜாஜியை ஏன் சங்கப் பரிவாரங்கள் கொண்டாடுவதில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சர்தார் வல்லபபாய் படேலின் பெருமை மறைக்கப்படுவதால் அதை பேசுவது மறுக்கப்படுவதாலேயே உலகிலேயே அவருக்கு மிக உயரமான சிலை அமைத்திருப்பதாக மத்திய அரசு விளக்கி வருகிறது.

ஆனால், இந்த சிலையில் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். அரசியல் இருக்கிறது என்பதே எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டு. படேல் சிலை குறித்து கருத்து கூறிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூட நாட்டில் ஏழைகள் உணவின்றி தவிக்கும்போது ரூ.3000 கோடி செலவில் சிலை எதற்கு... இவ்வளவு செலவை வல்லபபாய் படேலே அனுமதித்திருக்கமாட்டார் எனக் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது குறித்து சூசகமாக ட்வீட் செய்துள்ள ரவிக்குமார், "இந்து மதப் பற்றாளரும் வேத, இதிகாசங்களில் ஆழ்ந்த புலமை கொண்டவரும், கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்து இந்தியா முழுதும் அறியப்பட்டவருமான திரு ராஜாஜியை ஏன் சங்கப் பரிவாரங்கள் கொண்டாடுவதில்லை?" எனப் பதிவிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close