[X] Close

ஹாட்லீக்ஸ் : அதிகாரம் தூள் பறக்குது


hot-leaks-try-admk

  • kamadenu
  • Posted: 31 Oct, 2018 10:22 am
  • அ+ அ-

திருச்சி எம்பி-யான குமார் அதிமுக மாவட்டச் செயலாளராகவும் இருப்பதால் அமைச்சர் ரேஞ்சுக்கு அதிகாரத்தில் தூள் கிளப்புகிறார். 

சமீபத்தில் கான்ராக்ட் ஒதுக்கீடு தொடர்பாக திருச்சியின் தலையாய இரண்டு அதிகாரிகளிடம் கொஞ்சம் தூக்கலாகவே அதிகாரம் காட்டினாராம் குமார்.

 பொறுமையிழந்த அதிகாரிகள் இருவரும் நேராக சென்னைக்கு வந்து முதல்வரைச் சந்தித்து குமுறித் தீர்த்துவிட்டார்களாம்.

 “இனிமேல் அவர் ஏதாவது சொன்னால் சென்னையிடம் கேட்டுவிட்டுச் செய்கிறோம்னு மட்டும் சொல்லுங்க. பெருசா எதுவும் அலட்டிக்க வேண்டாம்” என்று முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை சொல்லி அனுப்பினார்களாம். 

இதுதெரியாமல், “அவங்க ரெண்டு பேரையும் திருச்சியைவிட்டு தூக்காம விடமாட்டேன்” என குமார் சபதமேற்காத குறையாகச் சொல்லிக்கொண்டிருக்கிறாராம் குமார். 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close