[X] Close

 ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்கு நேருவும் அவர் குடும்பமுமே காரணம்: சு.சுவாமி குற்றச்சாட்டு


nehru-gandhi-family-responsible-for-j-k-unrest-swamy

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 30 Oct, 2018 17:15 pm
  • அ+ அ-

ஜம்மு காஷ்மீரில் நிலவும் பிரச்சினைக்கு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், ஒட்டுமொத்த காந்தி குடும்பமுமே காரணம் என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீரில் பல ராணுவ வீரர்களின் மரணத்துக்கு மத்திய அரசே காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதில் சொல்லும் வகையில் சுவாமி, "ஐக்கிய நாடுகளிடம் காஷ்மீரை தட்டில் வைத்து ஒப்படைத்த ஜவஹர்லால் நேருவே ஒட்டுமொத்த பிரச்சினைக்குக் காரணம். அதற்கு முன்னால் பிரச்சினைகள் இல்லை. மற்ற சமஸ்தானங்கள் / மாநிலங்கள் எல்லாம் அமைதியாக இந்தியாவுடன் இணைந்தன. ஆனால் நேரு ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று இந்த பிரச்சினையை கிளப்பினார். அவரும், அவரது குடும்பமுமே ஜம்மு மற்றும் காஷ்மீரின் இன்றைய நிலைக்கு பொறுப்பு. நாங்கள் அதை சரி செய்ய முயற்சிக்கிறோம். 

ராகுல் காந்தி நாடு முழுவதும் சென்று குற்றம் சாட்டிக்கொண்டிருக்கிறார். ஆதாரமின்றி குற்றம்சாட்டுவது ராகுலுக்கு பழக்கமாகிவிட்டது. இதன் காரணமாக அவருக்கெதிராக பல மானநஷ்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன. ராகுல் காந்தி, தான் பேசுவதற்கு சாட்சிகள் தர வேண்டும் என நினைக்கிறேன். இல்லையென்றால் அவர் எவ்வளவு பொறுப்பற்றவர் என்பதை மக்கள் உணருவார்கள்" என்று பேசியுள்ளார். 


 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close