[X] Close

அதிமுக தொண்டனுக்கும் நிர்வாகிக்கும் பயமே கிடையாது!- முதல்வர்


cm-interview

  • பாரதி ஆனந்த்
  • Posted: 30 Oct, 2018 15:23 pm
  • அ+ அ-

அதிமுக தொண்டனுக்கும் சரி நிர்வாகிக்கும் சரி எப்போதுமே பயமே கிடையாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "அதிமுகவை உடைக்க சில எட்டப்பர்கள் சதி செய்தார்கள். சதிகாரர்களால் பாதை மாறி சென்றவர்கள் கட்சிக்கு திரும்ப வேண்டும் என்றுதான் நாங்கள் அழைப்பு விடுத்தோம் தவிர டிடிவி தினகரனுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை. ஏனென்றால் அவர் அதிமுக உறுப்பினராக இல்லை. தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து அனைவரின் கருத்து கேட்கப்பட்டு முடிவு எட்டப்படும்.

திமுக ஆட்சிக்கு வந்தால் இப்போதைய அமைச்சர்கள் அனைவரும் உள்ளே செல்வார்கள் என கருத்து கூறும் ஸ்டாலின் அதுவரை திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வெளியே இருப்பார்களா என பார்ப்போம். ஸ்டாலின் எங்கள் மீது என்ன வழக்கு போடுவார்கள் எனத் தெரியவில்லை.
அம்மா இல்லாததால் மிரட்டிப் பார்க்கிறார்கள். கட்சி உடையும் என நினைத்தார்கள் நடக்கவில்லை. ஆட்சி கவிழும் என நினைத்தார்கள் அதுவும் நடக்கவில்லை. அதனால், இப்போது ஊழல் குற்றச்சாட்டை கையில் எடுத்திருக்கிறார்கள்" என்றார்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close