[X] Close

தினகரன் ஒரு மண் குதிரை: ஜெயக்குமார் விமர்சனம்


jayakumar-slams-ttv

  • பாரதி ஆனந்த்
  • Posted: 30 Oct, 2018 13:16 pm
  • அ+ அ-

டிடிவி தினகரனை அதிகம் விமர்சித்தவர்கள் பட்டியல் எடுத்தால் அமைச்சர் ஜெயக்குமாருக்குதான் முதலிடம் எனும் அளவுக்கு அவர் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

நேற்று, தினகரனை வாலறுந்த நரி என விமர்சித்திருந்தார். இந்நிலையில் தற்போது தினகரன் ஒரு மண் குதிரை என விமர்சித்திருக்கிறார்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை, நந்தனத்தில் இருக்கும் முத்துராமலிங்கம் சிலைக்கு மரியாதை செலுத்தினார் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "தினகரன் ஒரு மண் குதிரை. அவரை நம்பி ஆற்றில் இறங்கியவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். சசிகலா குடும்பத்தினரைத் தவிர வேறு யார் கழகத்துக்கு வந்தாலும் அவர்களை சேர்ப்பது குறித்து பரிசீலிப்போம்" என்றார்.

முன்னதாக, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் கட்சியில் மீண்டும் இணைய வேண்டும் என முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துனர். உயர் நீதிமன்ற தீர்ப்பின் யதார்த்தத்தினை புரிந்து மாற்று பாதையில் சென்றோர் கட்சிக்கு திரும்புங்கள் எனக் கூறியிருந்தனர்.

இந்நிலையில், தினகரனை நம்ப வேண்டாம் என்ற அரசியலை மீண்டும் மீண்டும் அதிமுக முன்னெடுத்து 18 பேரையும் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியை செய்வதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close