[X] Close

தினகரனை அழைக்கவில்லை; திசைமாறிச் சென்ற தொண்டர்களைத்தான் அழைத்தோம்!- வைத்திலிங்கம்


vaithilingam-on-ttv-dhinakaran

  • பாரதி ஆனந்த்
  • Posted: 29 Oct, 2018 15:42 pm
  • அ+ அ-

அதிமுகவுக்கு திரும்புமாறு தினகரனை அழைக்கவில்லை திசைமாறிச் சென்ற தொண்டர்களைத்தான் அழைத்தோம் என எம்.பி., வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

முன்னதாக, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் கட்சியில் மீண்டும் இணைய வேண்டும் என முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளனர். உயர் நீதிமன்ற தீர்ப்பின் யதார்த்தத்தினை புரிந்து மாற்று பாதையில் சென்றோர் கட்சிக்கு திரும்புங்கள்" எனக் கூறியிருந்தனர்.

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி., வைத்திலிங்கம், "அதிமுகவின் நிலைப்பாடு அனைவருக்கும் பொருந்தும் தினகரனைத் தவிர. நாங்கள் தினகரனை அழைக்கவில்லை திசைமாறிச் சென்ற தொண்டர்களைத்தான் அழைக்கிறோம்.

நாங்கள் எல்லாத் தேர்தல்களிலும் வெற்றி பெறுவோம். 3 எம்.எல்.ஏ.,க்களும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் அவர்கள் என்ன விளக்கம் தருகிறார்கள் என்பதைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எல்லாம் சொன்னார்கள். ஆனால், இன்று முதல்வர் மீதான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றமே சிபிஐ-க்கு தடை வழங்கியிருக்கிறது. இதிலிருந்தே எங்கள் மீது எந்தக் குறையும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close