[X] Close

ரஜினியைப் பார்த்து திமுகவினருக்கு பயம்: அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி


minister-jayakumar-speech-about-dmk-and-rajini

  • kamadenu
  • Posted: 29 Oct, 2018 14:45 pm
  • அ+ அ-

ரஜினியைப் பார்த்து திமுக பயப்படுவதால்தான் அவருக்கு எதிராக கட்டுரை எழுதுகின்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

ரசிகர்களை வைத்து கட்சி ஆரம்பித்துள்ள ரஜினி, ரசிகர் என்பதை வைத்து பதவிக்கு வர தகுதி என்று மட்டும் நினைக்கக்கூடாது என்று ரஜினி கூறியுள்ளாரே?

அன்புச் சகோதரர் ரஜினி அரசியலுக்கு வரட்டும், கட்சி ஆரம்பிக்கட்டும், ஆனால் எங்கள் ஓட்டுவங்கியில் கையே வைக்கமுடியாது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் யாராவது வெளியே சென்றார்களா? இரண்டு சதவிகிதத்தினர் வெளியே சென்றுள்ளனர். அவர்களும் திரும்பி வருவார்கள் என்று முதல்வர், துணை முதல்வர் கூறியுள்ளனர்.

பொதுவாக ரஜினியைக் கண்டு பயப்படுபவர்கள் திமுகவினர் என்று நினைக்கிறேன். அதனால்தான் ஹூ இஸ் த பிளாக் ஷிப் என்று கட்டுரை எழுதுகிறார்கள். ஆகவே அவர் கட்சி ஆரம்பிக்கட்டும், பிரச்சாரம் செய்யட்டும், எதுவேண்டுமானாலும் செய்யட்டும் எங்களுக்கு அதனால் எந்த பாதிப்பும் கிடையாது. கவலைப்பட வேண்டியவர்கள் திமுகவினர்தான்.

உங்கள் மீதான புகார் தொடர்பாக, வலைதளத்தில் வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கும் நீங்கள் நேரடியாக உங்கள் மீது குற்றச்சாட்டை வைக்கும் வெற்றிவேல் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க மறுக்கிறீர்கள்?

யாராக இருந்தாலும் சட்டம் என்று ஒன்று உள்ளது. சட்டப்படி எதிர்கொள்ள எல்லோரும் தயாராக இருக்கும்போது எதைப் பற்றியும் கவலையில்லை.

இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே நீங்கள்?

ஒருவரைப் பிடித்துள்ளோம். இந்த ஆடியோவைக் கொண்டுவந்தது யார் என்று விசாரணை நடத்தி உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்போம் உங்களுக்கும் தெரிவிப்போம்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close