[X] Close

சசிதரூர் கிண்டலுக்கு 'சிவபக்தர்' ராகுல் பதில் என்ன?- மத்திய அமைச்சர் விளாசல்


rahul-gandhi-must-apologize-to-all-hindus

  • பாரதி ஆனந்த்
  • Posted: 29 Oct, 2018 09:57 am
  • அ+ அ-

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடியை சிவலிங்கத்தின் தலையில் அமர்ந்திருக்கும் தேள் என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து ரவிசங்கர் பிரசாத் அளித்த பேட்டியில், "கொலை வழக்கில் குற்றஞ்சாட்டபட்டவர் எம்பெருமான் சிவனை அவமதித்துவிட்டார்.
சிவனின் பக்தன் என தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் ராகுல் காந்தி இதற்கு பதில் சொல்ல வேண்டும். காங்கிரஸ் எம்.பி., ஒருவர் இந்து கடவுளை மிகக் கேவலாக சித்தரித்துள்ளதற்கு சிவ பக்தர் ராகுல் பதில் என்ன?

ராகுல் காந்தி இந்துக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்" எனப் பேசியுள்ளார்.

முன்னதாக, "பிரதமர் மோடியை கட்டுப்படுத்த முடியாமல் ஆர்எஸ்எஸ் திணறுகிறது. சிவலிங்கத்தின் மீதுள்ள தேள்போல பிரதமர் மோடி இருப்பதாக ஆர்எஸ்எஸ்க்கு நெருக்கமானவர்களே கூறுகிறார்கள். தரையில் தேள் இருந்தால் அதனை காலில் உள்ள செருப்பை வைத்துகூட அடித்து விடலாம்.

ஆனால் சிவலிங்கத்தின் மீது தேள் இருப்பதால் எதையும் கொண்டு அடிக்க முடியாது; கொத்தி விடுமே என்று அதனை கைகளால் எடுத்து வெளியே போடவும் முடியாது. இதுதான் ஆர்எஸ்எஸ்ஸின் தற்போதைய நிலை" என சசிதரூர் விமர்சித்திருந்தார்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close