[X] Close

ஹாட்லீக்ஸ் : ரிவர்ஸ் அடித்த முதல்வர்


hot-leaks-edappadi

  • kamadenu
  • Posted: 28 Oct, 2018 18:03 pm
  • அ+ அ-

கடந்த 22-ம் தேதி கரூர் வந்திருந்த முதல்வர் அங்கே நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திருச்சிக்குப் பயணமானார்.

முதல்வர் வருகையை அறிந்து திருச்சியில் ஜீயபுரம் பகுதியில் அதிமுகவினர் கூடி நின்றனர்.

அவர்களைப் பார்த்ததும் காரை நிறுத்திய முதல்வர், “என்ன இங்கே நிற்கிறீர்கள்?” என்று விசாரித்தாராம்.

அதற்கு அவர்கள், “கட்சிக்காரர் வீட்டுக் கல்யாணத்துக்கு வந்தோம்” என்று சொல்ல... “கட்சிக்காரர்தானே நாமும் போனாப் போச்சு” என்று சொல்லி வண்டியைத் திருப்பினாராம் முதல்வர்.

அப்போது உடனிருந்த மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திகேயன், “சசிகலாவின் உறவினருக்குச் சொந்தமான திருமண மணடபத்தில் அந்தக் கல்யாணம் நடக்குதுண்ணே” என்று சொல்ல...

முதல்வரின் கார் ரிவர்ஸ் அடித்து, சர்க்யூட் ஜாகைக்குத் திரும்பியது!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close