[X] Close

அதிமுகவுக்கு  பங்கம் விளைவிக்க நினைத்தால் ஜெ. ஆன்மா சும்மா விடாது!- தம்பிதுரை


thanmbidurai-on-court-verdict

  • பாரதி ஆனந்த்
  • Posted: 27 Oct, 2018 16:43 pm
  • அ+ அ-

அதிமுக ஆட்சிக்கு பங்கம் விளைவிக்க நினைக்கும் யாரையும் ஜெயலலிதா ஆன்மா சும்மா விடாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் அதிமுகவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ள நிலையில்தான் தம்பிதுரை இக்கருத்தினை தெரிவித்திருக்கிறார்.

கரூர் நகர அதிமுக சார்பில் கட்சியின் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இதில் பேசிய தம்பிதுரை, "அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர்கள் பதவியை இழந்து நிற்கிறார்கள். அதிமுக ஆட்சிக்கு பங்கம் விளைவிக்க நினைக்கும் யாரையும் ஜெயலலிதா ஆன்மா சும்மா விடாது. 

2019 நாடாளுமன்ற தேர்தலில், ஜெயலலிதா வழியில் அதிமுக தனித்து நின்று போட்டியிட்டு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இந்த ஆட்சி 5 ஆண்டுகளையும் பூர்த்தி செய்யும்.  

மு.க. ஸ்டாலின் முதல்வராக வேண்டி சட்டையை கிழித்துக் கொண்டு ரோட்டுக்குகூட வந்து பார்த்தார். ஆனால் நடக்கவில்லை.
கருணாநிதியுடன் திமுகவின் உதயசூரியனும் அஸ்தமனம் ஆகிவிட்டது.  ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வராக முடியாது" எனப் பேசினார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close