[X] Close

எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை விரிசலும் இல்லை!- டிடிவி தினகரன்


ttv-interview

  • பாரதி ஆனந்த்
  • Posted: 27 Oct, 2018 10:34 am
  • அ+ அ-

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.,க்களுக்கும் எனக்கும் எந்த மோதலும் இல்லை விரிசலும் இல்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மதுரையில் நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் தங்கத் தமிழ்ச் செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். இதனால், டிடிவிக்கும் 18 பேருக்கும் இடையே மோதல் என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த தினகரன், "தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.,க்களுக்கும் எனக்கும் இடையே எந்த மோதலும் இல்லை விரிசலும் இல்லை. நாங்கள் எல்லோரும் ஒன்றாகத் தான் இருக்கிறோம்.
நேற்று ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் எனக்கு வேறு சில சந்திப்புகள் இருந்ததால் நான் பேட்டியளிக்க வரவில்லை. ஆனால், அதுவே செய்தியாகி இருக்கிறது.

எல்லோரும் என்னுடன் தான் இருக்கிறார்கள். எல்லோரும் கட்சிக்காக வந்திருக்கிறார்கள். மிகவும் எதிர்பார்த்த தீர்ப்பு மாறி வந்ததால் எல்லோருக்கும் ஒரு ஏமாற்றம் இருந்தது. மற்றபடி எல்லோரும் ஒண்ணா இருக்கோம் நல்லா இருக்கோம். அதுதவிர சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரும் வந்திருந்தனர். கருணாஸ், குரு பூஜைக்காக சென்றதால் வரமுடியவில்லை. வேறு எந்த சலசலப்பும் இல்லை. அது உங்கள் ஆசையாக இருக்கலாம்.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம். ஒருவேளை மேல்முறையீடு செய்தால் தேர்தல் அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டால் வழக்கை வாபஸ் பண்ணிவிட்டுகூட தேர்தலில் போட்டியிடுவார்கள்.
தேர்தலுக்கு அத்தனை பேரும் தயாராக இருக்கிறார்கள்" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close