[X] Close

மலேசிய பிரதமருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு


mk-stalin-s-meeting-with-malaysian-prime-minister

  • Team
  • Posted: 27 Feb, 2018 06:16 am
  • அ+ அ-

உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த 24-ம் தேதி ஸ்டாலின் மலேசியா சென்றார். மாநாட்டில் பங்கேற்ற அவர், நேற்று காலை மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை சந்தித்தார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில், ‘‘மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினேன். அவரது திறமையான நிர்வாகத்தில் மலேசியா முன்னேற்றம் அடைந்துள்ளது. மலேசிய நாட்டின் முன்னேற்றத்தில் மலேசியவாழ் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் பெரும் பங்காற்றி வருவது பெருமை அளிக்கிறது. திமுக தலைவர் கருணாநிதி பற்றியும், தமிழக மக்கள் பற்றியும் மலேசிய பிரதமர் கேட்டறிந்தார். அப்போது, வரும் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் மலேசிய பிரதமராக அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்’’ என கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close