[X] Close

வாழ்க ஜனநாயகம்!- 18 எம்.எல்.ஏ.,க்கள் தீர்ப்பை வரவேற்ற ஜோதிமணி


jothimani-welcomes-verdict

  • பாரதி ஆனந்த்
  • Posted: 25 Oct, 2018 13:50 pm
  • அ+ அ-

18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பால் அரவக்குறிச்சி தொகுதிக்கு எம்.எல்.ஏ., இல்லாமல் போனதை வரவேற்றிருகிறார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "பணப்பட்டுவாடாவுக்காக இந்திய வரலாற்றில் முதல்முறையாக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு, பிறகும் மிகத் தாராளமாக பணப்பட்டுவாடா செய்யப்பட்டு  நடைபெற்ற எங்கள் அரவக்குறிச்சி தொகுதிக்கு இன்றைய உயர் நீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு  சட்டமன்ற உறுப்பினர் கிடையாது! வாழ்க ஜனநாயகம்!" எனப் பதிவிட்டிருக்கிறார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பணப்பட்டுவாடா புகாரால் அரவக்குறிச்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நடத்தப்பட்ட தேர்தலில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார்.

ஆனால், அதிமுகவில் விரிசல் ஏற்பட்ட போது இவர் டிடிவி ஆதரவாளர் ஆனார். முதல்வர் எடப்பாடியை மாற்ற வேண்டும் என்று ஆளுநரைச் சந்தித்த 18 எம்.எல்.ஏ.,க்களில் இவரும் ஒருவர்.

இந்நிலையில், தகுதி நீக்கம் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் இவரது பதவி பறிபோனது. இதை ஜோதிமணி வெகுவாக வரவேற்றிருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close