[X] Close

ஹாட்லீக்ஸ் : டி.ஆர். ஸ்டைலில் கிருஷ்ணப்பிரியாவின் ‘மீ டூ’ பேச்சு


hot-leaks-krishnapriya

கிருஷ்ணப்ரியா

  • kamadenu
  • Posted: 24 Oct, 2018 10:13 am
  • அ+ அ-

மீ டூ விவகாரம் தொடர்பாகப்  பலரும் தங்களது  கருத்துகளைப் பதிவிட்டு வரும் நிலையில் சசிகலாவுடன் சிறையில் இருக்கும் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா தனது முகநூல் பக்கத்தில் குரல் வழியே மீ டூ பிரச்சாரத்துக்கு தனது ஆதரவைப் பதிவு செய்திருக்கிறார்.

“தங்களுக்குப்  பிடிக்காத ஆண்களைப் பழிவாங்க மீ டூ பிரச்சாரத்தை பெண்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கு” என்று சீமான் சொன்னதை, “ஆணாதிக்க மனோபாவம் வந்திருக்கிறது போலும் மேதகு சீமானுக்கு” என்று கடுமையாகச் சாடியிருக்கும் கிருஷ்ணப்பிரியா, “பெண்கள் பாலியல் ரீதியாக தங்களைத் துன்புறுத்துபவர்கள் பெரியவர்கள் என்பதற்காகப் பொறுத்துப் போகக்கூடாது, வலுத்தார் என்பதற்காக இளைத்துப் போகக்கூடாது, அரசியல்வாதி என்பதற்காக அச்சப்படக்கூடாது, பலம் பொருந்தியவர் என்பதற்காக பதுங்கிக் கொள்ளக்கூடாது.பெண்கள் சாந்த சொரூபினியாக மட்டுமல்லாது அநியாயம் நிகழ்ந்திடும்போதெல்லாம் மகிஷாசுரமர்த்தினியாகவும் மாற வேண்டும்” என்று முழங்கியிருக்கிறார்.

இன்னொரு கூடுதல் தகவல்; இதை அப்படியே ஜெயலலிதா பாணியில் ஏற்ற இறக்கத்துடன் பேசியிருக்கிறார் கிருஷ்ணப்பிரியா!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close