[X] Close

இதுவும் சிஎஸ்ஆர் நிதியில் வருகிறதா? - நாராயணசாமியிடம் கேள்வி எழுப்புகிறார் கிரண்பேடி


kiran-bedi-questions-narayanasamy

  • kamadenu
  • Posted: 23 Oct, 2018 18:31 pm
  • அ+ அ-

'முதல்வரே இதுவும் 'சிஎஸ்ஆர்' என்ற சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியின் கீழ் வருகிறதா?' என்று கடற்கரை தூய்மைப் பணியை குறிப்பிட்டு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரி கடற்கரை தூய்மைபணி தொடர்பாக புகைப்படங்களை வெளியிட்டு சிஎஸ்ஆர் நிதி தொடர்பாக நேற்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் தெரிவித்துள்ள தகவல்:

தேசிய சமூக பணியாளர்களும் மற்றும் சமூக தொண்டர்களும் புதுச்சேரியை நேசிப்பதால் ஊதியங்கள் இல்லாமல் சில பணிகளைச் செய்கின்றனர்.

இதில் டெண்டர்கள் இல்லை; பரிந்துரைகள் இல்லை; நிதி பரிமாற்றங்கள் இல்லை; கோப்புகள் இல்லை; முன் அனுமதி எதுவும் தேவையில்லை. அவர்களின் எண்ணத்தில் கடற்கரையை தூய்மை செய்கின்றனர். சமூக அடிப்படையில் உள்ள அக்கறையின் காரணத்தினாலேயே இப்பணியை மேற்கொள்கின்றனர்.

இவர்களையும் தடுக்க நினைக்கிறீர்களா முதல்வரே! இதுவும் சிஎஸ்ஆர் நிதியில் வருகிறதா! என்று கூறுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்தும் ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ்அப் மூலம் பல கருத்துகளை வெளியிட்டார். அவற்றின் விவரம்:

நடப்பாண்டு மழைகாலத்துக்கு தயாராகியுள்ளோம். அடுத்தாண்டு முன்கூட்டியே தூர்வாரும் பணிகள் செய்யப்படும்.

இப்பணிகளை ஆய்வு செய்துள்ளேன். மேலும் ஒப்பந்தாரர்களுக்கு நிலுவை தொகை அதிகளவில் தரவேண்டிய சூழலும் உள்ளது. இவர்கள் கடந்த காலங்களில் செய்துள்ள பணி கடவுளுக்கே தெரியும்.

மருத்துவக் கல்லூரி இடங்கள் வழங்குவதை சீர் செய்தது போல் தூர்வாரும் விஷயத்திலும் தீர்வு காண்போம். இவ்விஷயத்தில் தனி வாட்ஸ்அப் குழு அமைத்துள்ளோம். அதில் 150 பொதுப்பணித்துறை பொறியாளர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், ஆட்சியர் மற்றும் ராஜ்நிவாஸ் குழு ஆகியவை இடம் பெற்றுள்ளது.

தூர்வாருவதை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close