[X] Close

சந்திரபாபு நாயுடுவுக்கு உள்ள சூடு சொரணை ஓபிஎஸ் ஈபிஎஸ்ஸுக்கு இல்லையே?- ஸ்டாலின்


chandraabu-naidu-stalin

  • பாரதி ஆனந்த்
  • Posted: 16 Mar, 2018 12:55 pm
  • அ+ அ-

சந்திரபாபு நாயுடுவுக்கு உள்ள சூடு சொரணை ஓபிஎஸ் ஈபிஎஸ்ஸுக்கு இல்லை என்பது வேதனை அளிக்கிறது என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

ஈரோட்டில் திமுக மண்டல மாநாடு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விளக்கினார். அப்போது, செய்தியாளர் ஒருவர் தமிழகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை பாஜக ஏமாற்றிக் கொண்டிருப்பதுபோல் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, அமித் நாயக்கை பாஜக ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்ப,

"நல்ல கேள்வி கேட்டீர்கள். மத்திய அரசு தங்கள் மாநிலத்தை வஞ்சிக்கிறது என்பதை சந்திரபாபு நாயுடு உணர்ந்துள்ளார். மோடி அரசு, தான் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்பதாலேயே அக்கட்சிக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டதோடு இனி கூட்டணியே கிடையாது என்ற முடிவையும் எடுத்துள்ளார்.
ஆனால், அந்த சூடு சொரணை ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸுக்கு இல்லை வரவில்லை என்பது வேதனையளிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துள்ளது. நீட் விவகாரத்தில் தமிழகத்துக்கு மோசம் செய்துள்ளது. ஆனால், இதையெல்லாம் எதிர்த்து கேள்வி கேட்க ஓபிஎஸ், ஈபிஎஸ்.ஸுக்கும் வக்கு இல்லை வகை இல்லை யோக்கியதை இல்லை அறுகதை இல்லை. அப்படி இருக்கிறது இந்த குதிரை பேர ஆட்சி. சந்திரபாபு நாயுடுவைப் பார்த்தாவது இவர்கள் திருந்துவார்களா? உணர்வார்களா? என்ற கேள்வி எழுகிறது" என்றார்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close