[X] Close

கவுன்சிலர் தேர்தலில்கூட கமல் வெற்றிபெற முடியாது: அமைச்சர் எம்.மணிகண்டன் கருத்து


minister-manikandan-speech-about-kamal

ராமநாதபுரம் அரண்மனை முன் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசினார் அமைச்சர் எம்.மணிகண்டன்.

  • kamadenu
  • Posted: 22 Oct, 2018 15:05 pm
  • அ+ அ-

நடிகர் கமல்ஹாசனால் கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றிபெற முடியாது என அமைச்சர் எம்.மணிகண்டன் பேசினார்.

ராமநாதபுரம் அரண்மனை முன் அதிமுக 47-ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத் தலைவர் செ.முருகேசன், நகர் செயலாளர் அங்குச்சாமி, ஜெயலலிதா பேரவை செயலாளர் சேது.பாலசிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தலைமைக் கழகப் பேச்சாளர் பூவை.செழியன் உட்பட பலர் பேசினர்.

கூட்டத்தில், அமைச்சர் எம்.மணிகண்டன் பேசியதாவது:

ட்விட்டரில் அரசியல் செய்து கொண்டிருப்பவர் நடிகர் கமல் ஹாசன். ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசத் தகுதியில் லாதவர். தேர்தல் என்று வந்தால் அவரால் கவுன்சிலராகக்கூட வெற்றிபெற முடியாது. அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு அதிமுக ஆட்சியை கலைக்கப் பார்க்கிறார். மு.க.ஸ்டாலினும், டி.டி.வி.தினகரனும் முதல்வர் பதவி வெறி பிடித்தவர்கள். அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க டி.டி.வி.தினகரனால் முடியாது.

திருவாடானை தாலுகாவில் நடந்த அரசு விழாவில் அழைப்பிதழில் அவரது பெயர் அச்சிடப்பட்டிருந்தும், அவரது பெயர் போடவில்லை என கருணாஸ் எம்எல்ஏ பொய்யான தகவலை சொல்லி வருகிறார். தனது தொகுதிப் பக்கம் வரக்கூட தைரியம் இல்லாதவர். வாக்களித்த மக்களையும், கட்சித் தொண்டர் களையும் ஏமாற்றி விட்டார்.

சபரிமலை ஐயப்பன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். யாரும் மத நம்பிக்கைகளில் தலையிட்டு தெய்வக் குற்றங்களுக்கு ஆளாகி விடாதீர்கள் என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close