[X] Close

ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் இடையே உள்கூட்டு: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு


ops-speech-at-sivakasi

  • kamadenu
  • Posted: 22 Oct, 2018 15:01 pm
  • அ+ அ-

திமுக தலைவர் ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் இடையே உள்கூட்டு உள்ளது. விரைவில் அது உள்குத்தாக வெளிவரும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

அதிமுகவின் 47-ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. சிவகாசி நகரச் செயலர் அசன்பதுருதீன் தலைமை வகித்தார். அதிமுக மாவட்டச் செயலரும் பால்வளத் துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, டி.ராதா கிருஷ்ணன் எம்.பி., சந்திபிரபா எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கட்சியின் ஒருங் கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:

குடும்ப ஆட்சி கூடாது என்பதற்காக தர்ம யுத்தத்தை ஆரம்பித்தேன். ஆனால், எங்கிருந்தோ வந்த டி.டி.வி.தினகரன் அமைச்சர்களை துன்புறுத்தி, அச்சுறுத்தி ஆட்சியையும், முதல்வர் பதவியையும் தனக்கானதாக ஆக்கிக்கொள்ள முயன்றார். இது சரியில்லை என்றுதான் முதல்வரும் வெளியேறினார்.

திமுக தலைவர் ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் ஆகியோரிடையே உள்கூட்டு உள்ளது. விரைவில் அது உள்குத்தாக வெளிவரும் என்றார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில் மழை பெய்தது. இதனால் பலர் கலைந்து சென்றனர். சிலர் குடைகள், பிளாஸ்டிக் இருக்கைகளை தலைக்குமேல் வைத்து ஓ.பன்னீர் செல்வத்தின் பேச்சைக் கேட்டனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close