[X] Close

எந்த துறையிலாவது ஊழல் என்று நிரூபிக்க முடியுமா? - மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் கே.பழனிசாமி சவால்


chief-minister-speech-about-stalin

  • kamadenu
  • Posted: 22 Oct, 2018 12:45 pm
  • அ+ அ-

தமிழக முதல்வர் கே.பழனிசாமி நேற்று சேலத்திலிருந்து கரூர் வழியாக காரில் திருச்சி வந்தார். முதல்வருக்கு பேட்டைவாய்த்தலையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் ப.குமார் எம்.பி தலைமையில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

அப்போது, முதல்வர் கே.பழனிசாமி பேசியதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எங்கள் மீது தினமும் குற்றச்சாட்டுகளை கூறுகிறார். பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டுள்ளார். திமுகவைச் சேர்ந்த 10 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. அவற்றை மறைப்பதற்காக தற்போது இந்த ஆட்சியில் ஊழல் நடைபெறுவதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார். பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி திமுகவினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால், அவர்களால் எந்த துறை யிலாவது ஊழல் என்று நிரூபிக்க முடியுமா? என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close