[X] Close

உயர் நீதிமன்றத்தில் பம்மிய எச்.ராஜா; ட்விட்டரில் சாடிய குஷ்பு


and-then-he-goes-scott-free-to-make-more-abusive-remarks-in-the-future

  • பாரதி ஆனந்த்
  • Posted: 22 Oct, 2018 11:49 am
  • அ+ அ-

சர்ச்சைப் பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை தனது ட்விட்டர் பக்கத்தில் விளாசியிருக்கிறார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு.

உயர் நீதிமன்றத்தை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதால் அவமதிப்பு வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து குஷ்பு தனது ட்விட்டரில், "அப்புறம் என்ன! இனி சுதந்திரமாக எதிர்காலத்தில் இன்னும் பல சர்ச்சைக் கருத்துகளை சொல்வார்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

முன்னதாக, "பதட்டமான சூழலில் சொல்லப்பட்ட வார்த்தைகள். வேண்டுமென்றே கூறவில்லை. நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என எச்.ராஜா நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close