[X] Close

மோடியை வீழ்த்தும் வல்லமை ராகுல் காந்திக்கு உண்டு: தமிழக காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர் நம்பிக்கை


thirunavukarasar-speech-about-rahul-gandhi

காளையார்கோவிலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர். உடன் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக மேலிடப் பார்வையாளர் சஞ்சய்தத் உள்ளிட்டோர்.

  • kamadenu
  • Posted: 21 Oct, 2018 08:38 am
  • அ+ அ-

மோடியை வீழ்த்தும் வல்லமை ராகுல் காந்திக்குத் தான் உண்டு என்று அக்கட்சியின் தமிழகத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் பேசினார்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பான கலந்துரையாடல், கருத்துக் கேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய லாளரும், தமிழக மேலிடப் பார்வையாளருமான சஞ்சய்தத், தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஆர்.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்.

இதில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் பேசியது: பாஜக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில்தான் செய்ய முடியாத பல தேர்தல் வாக்குறுதிகளை அளித்ததாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

பாஜகவைப் பொறுத் தவரை தேர்தல் அறிக்கை என்பது தேர்தலுக்காக சொல்லக்கூடியது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் அறிக்கை மிக முக்கிய மானது. காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் சொன்னதை நடைமுறைப்படுத்தியது.

தற்போது திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து செயல் படுகிறது. மோடியை வீழ்த்தும் வல்லமை ராகுல் காந்திக்குத் தான் உண்டு. பாஜகவை வீழ்த்தக்கூடிய வல்லமை காங்கிரஸ் கட்சிக்குத் தான் உள்ளது. மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் தான் ஆட்சி அமையும்.

அதேபோல், தமிழகத்திலும் என்றாவது ஒருநாள் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும். அதில் காமராஜர் ஆட்சியை கொண்டு வரவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்படுவோம். திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எந்தவொரு பிரச்சினையும் கிடையாது. இருவரும் ஒன்றாக இணைந்துதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார்.

இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:

2014 தேர்தலில் பாஜக பல பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது. அதில் ஒன்றைக்கூட இன்று வரை நிறை வேற்றவில்லை. கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தை சீரழித்ததுதான் பாஜகவின் பெரும் சாதனை. பாஜகவின் தவறான கொள்கையால் சிறு, குறு தொழில் கள் பாதிக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படும். இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப் படும். பத்திரிகை சுதந்திரம் காக்கப்படும். தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலன் காக்கப்படும். இது போன்ற முக்கிய அம்சங்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என்றார்.

இதில் கார்த்தி சிதம்பரம், மலேசியா பாண்டியன் எம்எல்ஏ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close