[X] Close

மோடி மஸ்தான்; கோமாளி; சர்க்கஸ் கூடாரம்!- கிண்டலடித்த ஸ்டாலின் பதிலடி கொடுத்த முதல்வர்


edpadi-retaliates-stalins

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Oct, 2018 13:30 pm
  • அ+ அ-

தமிழக அரசை சர்க்கஸ் கூடாரம் என்றும் அதன் ரிங் மாஸ்டர் மோடி, அதில் கோமாளி வேடம் போட்டிருக்கிறார் முதல்வர் என மிகக் கடுமையாக விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "சர்க்கஸ் நடத்துவதற்கும் திறமை தேவை. சர்க்கஸில் திறமை இருந்தால் மட்டுமே பங்கேற்க முடியும்.  சாதாரணமாக யாரும் பங்கேற்க முடியாது" என பதிலடி கொடுத்தார்.

முன்னதாக, தஞ்சாவூரில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகள் திருமண நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், "சர்க்கஸ் கூடாரத்தினுடைய 'ரிங் மாஸ்டர்' யார் என்று கேட்டீர்கள் என்றால், டெல்லியில் இருக்கக்கூடிய மோடி மஸ்தான்.

நான் மோடியை சொல்லவில்லை, 'ரிங் மாஸ்டரை' மோடி மஸ்தான் என்றுதான் சொல்லுவார்கள். அந்த 'ரிங் மாஸ்டர்' இன்றைக்கு டெல்லியில் இருக்கிறார்.

சர்க்கஸ் கூடாரத்தில் பழனிசாமி என்ன வேடம் போட்டிருக்கிறார் என்று சொன்னால் கோமாளி வேடம். கோமாளியை பார்த்தீர்கள் என்றால்,  இடையிடையே வந்து சிரிப்பை மூட்டிவிட்டு நகைச்சுவையை தந்துவிட்டு மகிழ்ச்சியை தந்துவிட்டு போய்விடுவார்" என்று பேசியிருந்தார்.

இதை சுட்டிக்காட்டியே முதல்வர் சர்க்கஸ் நடத்தவும் திறமை வேண்டும் என பதிலடி கொடுத்திருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close