[X] Close

டிசம்பர் 12ல் கட்சி அறிவிப்பு இல்லை ; - ரஜினி திட்டவட்டம்


rajini-interview

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Oct, 2018 12:12 pm
  • அ+ அ-

சென்னை விமானத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பஞ்ச் டயலாக் பாணியில் பேட்ட பராக் எனக் கூறிச் சென்றது அரசியல் கட்சி தொடக்கத்தின் சூசக குறிப்பீடு எனக் கூறப்படுகிறது.

பேட்ட படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த போது கட்சி தொடங்குவதில் 90% பணிகள் தயார் நிலையில் இருப்பதாகக் கூறிச் சென்றார்.
ரஜினியின் 165வது படமாக உருவாகி வருகிறது பேட்ட. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் இப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். த்ரிஷா, சிம்ரன், சசிகுமார், பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக்கி, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன், இயக்குநர் மகேந்திரன்  என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதற்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே முடிந்துள்ளது.

சூட்டிங் முடிந்து திரும்பிய அவர், "அரசியல் கட்சி தொடங்குவதில் 90% பணிகள் தயார் நிலையில் உள்ளன. பெண்கள் மீ டூ இயக்கத்தினை தவறாக பயன்படுத்தக் கூடாது. சின்மயி கூறிய புகாருக்கு வைரமுத்து பதில் சொல்லிவிட்டார்.
சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். ஆனால், மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிறைய ஐதீகங்கள் இருக்கும். அந்த ஐதீகத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும். பேட்ட பராக்.." எனக் கூறிச் சென்றார்.

ரஜினிகாந்த் கடந்த 2017 டிசம்பர் 31-ல் தனது அரசியல் வருகையை உறுதி செய்து அறிவித்தார். இந்த டிசம்பர் 12-ல் திருச்சியில் அவரது கட்சிப் பெயர் அறிவிக்கப்படும் என்று சலசலக்கப்படுகிறது. ஆனால், இந்தப் பேட்டியின் போது, பிறந்தநாளின் போது கட்சி அறிவிப்பு இல்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டார் ரஜினி. நேரமும் காலமும் வரும். அப்போது சொல்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close