[X] Close

ஹாட்லீக்ஸ் : ஆடியோ, வீடியோ... அமமுக அதகளம்!


hot-leaks-ammk

வெற்றிவேல்

  • kamadenu
  • Posted: 17 Oct, 2018 12:34 pm
  • அ+ அ-

“எம்பி-க்கு தம்பிப் பாப்பா பொறந்திருக்கு. தம்பி பாப்பாவுக்கு உரிய பங்கை பிரிச்சுக் குடுக்கலைனா வெவகாரமாகிப் போகும்” என்று கடந்த வாரம் அமமுக வெற்றிவேல் பற்றவைத்த நெருப்பு அதிமுக வட்டாரத்துக்குள் பெரும் விவாதப் பொருளாகியிருக்கிறது.

 எம்.பி-யின் அப்பா சசிகலா தரப்புக்கு எதிராகத் தொடர்ந்து முழங்கிக் கொண்டிருக்க... அவர் தன்னிடம் மனு கொடுக்க வந்த ஒரு கல்லூரி மாணவியை ஏமாற்றி விட்டதாக அறிக்கை வாசிக்கிறது தினகரன் கோஷ்டி.

அண்மையில் ஆண் குழந்தைக்கும் தாயாகிவிட்ட அந்தப் பெண்ணை தற்போது அமமுக கட்சியின் முக்கியப் பொறுப்பாளர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாராம். 

இது தொடர்பான சில ஆடியோ ஆதாரங்களைத் தங்களிடம் வைத்திருப்பதாகச் சொல்லும் தினகரனின் ஆட்கள், இதைப் பகிரங்கப்படுத்த சமயம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 

ஆடியோ, வீடியோவை வெச்சே அதிமுக-வை அநியாயத்துக்கு படுத்தி எடுக்குறாங்கப்பா!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close