[X] Close
 

சிங்கத்தின் மீது உட்கார்ந்த கொசு; தமிழகத்தை பிடித்திருக்கும் சனி: ஜெயக்குமார்


it-was-basically-a-mosquito

  • பாரதி
  • Posted: 15 Mar, 2018 12:18 pm
  • அ+ அ-

அதிமுக என்னும் சிங்கத்தின் மீது உட்கார்ந்த கொசு டிடிவி தினகரன் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

டிடிவி தினகரன் மதுரை மேலூரில் இன்று தனது கட்சியின் பெயரை அறிவித்து கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என அவர் தனது கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளார்.

கட்சிக் கொடியில் பெரிதாக ஜெயலலிதாவின் உருவப்படம் இடம்பெற்றுள்ளது. அவரது பொதுக்கூட்டத்துக்கும் கணிசமான அளவில் கூட்டம் சேர்ந்திருந்தது.


இந்நிலையில், தினகரன் புதிய கட்சி அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், "அதிமுக என்னும் சிங்கத்தின் மீது உட்கார்ந்த கொசு டிடிவி தினகரன். தினகரன் தொடங்குவது அணியல்ல தமிழ்நாட்டிற்கு பிடித்திருக்கும் சனி. அது எங்களை சில காலம் பிடித்திருந்தது. இப்போது அது எங்களைவிட்டுச் சென்றுவிட்டது" என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close