[X] Close

ஊழல் புகார் - முதல்வரை பதவி விலகச் சொல்வது சரியான நடவடிக்கை அல்ல: தமிழிசை


tamilisai-speech-about-edapadi-issue

  • kamadenu
  • Posted: 13 Oct, 2018 12:01 pm
  • அ+ அ-

ஊழல் புகாரை முன்வைத்து முதல்வரை பதவி விலகச் சொல்வது சரியான நடவடிக்கை அல்ல என்று சேலத்தில் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்

நெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக திமுக தொடர்ந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருந்த நிலையில் வழக்கை சிபிஐ விசாரித்து 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (அக்.13) உத்தரவிட்டது.

இந்த உத்தரவை முன்வைத்து பல்வேறு அரசியல் தலைவர்கள், முதல்வர் உடனடியாக பதவி விலகிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக “உயர்நீதிமன்றத்தின் உத்தரவு தவறு. மேல் முறையீட்டுக்குச் செல்வோம்” என்று  அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், சேலத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் முதல்வர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:

ஊழல் என்பது நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு என்பது கவலை அளிக்கக்கூடிய ஒன்று தான். அதற்கு அவர்கள் மேல்முறையீடு செல்கிறேன் என்று சொல்கிறார்கள். குற்றச்சாட்டு வந்தவுடனேயே ஒருவர் பதவி விலக வேண்டும் என்று இன்று சொல்லும் திமுக, காங்கிரஸ் போன்ற கட்சியினர், அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு வரும் போது பதவி விலகவில்லை. அதனால், ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. ஊழல் குற்றச்சாட்டை சொல்லிவிட்டு, உடனே பதவி விலகிட சொல்வது சரியான நடவடிக்கை அல்ல என்பது என் கருத்து

இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close