[X] Close

2019 மக்களவைத் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்குமா சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி?- ஓர் அலசல்


sp-bsp-alliance-may-be-a-game-changer-in-2019

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 Mar, 2018 10:34 am
  • அ+ அ-

உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர், பூல்பூர் தொகுதிகளில் பாஜக தோல்வி அடைந்திருக்கிறது. இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் பாஜக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.


இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானவுடனேயே முதன்முதலில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தவர் சமாஜ்வாதியின் தலைவர் ராம்கோபால் யாதவ்.
பகுஜன் சமாஜ்வாதி தொண்டர்கள் எங்களுக்கு தங்கள் முழு ஆதரவையும் நல்கியதோடு களத்தில் சிறப்பாக பணியாற்றினர். அவர்களது பங்களிப்பு பாராட்டுக்குரியது. பகுஜன் கட்சியின் தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் எங்களது நன்றியை உரித்தாக்குகிறோம்" என்று கூறினார்.


அதேவேளையில் இக்கூட்டணி 2019 மக்களவை தேர்தலிலும் நீடிக்குமா என்ற கேள்விக்கு மிக லாவகமாக "பொறுத்திருந்து பாருங்கள்" என்றார்.
அதேபோல், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி கூறும்போது, "இந்த கூட்டணி இடைத்தேர்தலுக்கும் வரவிருக்கும் ராஜ்ய சபா தேர்தலுக்குமானது. இருப்பினும், இத்தேர்தல் வெற்றியானது கூட்டணியின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் நிச்சயம் முக்கிய பங்குவகிக்கும்"
இதையேதான் அரசியல் நோக்கர்களும் கூறுகின்றனர். இந்தக் கூட்டணி நிச்சயம் 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்கின்றனர்.


திருப்புமுனை கூட்டணியாக அமையும்..
2019 பொதுத் தேர்தலில் எஸ்.பி. - பகுஜன் கூட்டணியானது திருப்புமுனை கூட்டணியாக அமைவதற்கு அதிக வாய்ப்பிருப்பதகக் கூறப்படுகிறது. அரசியல் அறிவியலாளர் முனைவர் சுஹாஸ் பல்ஷிகார் கூறும்போது, "2019 மக்களவை தேர்தல்வரை எஸ்பி- பகுஜன் கூட்டணி நீடித்தால் நிச்சயம் அது பெரும் திருப்புமுனையாக அமையும். 2014, 2017 தேர்தல்களில் பாஜகவின் செயல்பட்டை உற்று நோக்கினால் பாஜக அல்லாத கட்சிகளின் ஓட்டுகளை உடைத்ததே அவர்களுக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொண்டனர். இந்நிலையில், தற்போதுள்ள பாஜக - சமாஜ்வாதி கூட்டணியுடன் காங்கிரஸும் கைகோர்த்தால் 2019 தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது" என்றார்.


பாஜக கற்றுக்கொள்ளுமா?
உபி இடைத்தேர்தல் முடிவால், வரவிருக்கும் கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகத்தை பாஜக மாற்றி அமைக்க வேண்டியிருக்கும். கர்நாடகா தேர்தலுக்கு உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நட்சத்திர பிரச்சாகராக முன்னிறுத்த பாஜக திட்டமிட்டிருக்கிறது. தனது கோட்டையையே ஆதித்யநாத் கோட்டைவிட்ட நிலையில், பாஜக இனி எத்தகைய வியூகத்தை வகுக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
யோகியை குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ப்ரிஜேஷ் காலப்பா தனது ட்விட்டர் பக்கத்தில், "பூல்பூர், கோரக்பூருக்கு நன்றி. யோகி ஆதித்யநாத் தோல்வியடைந்துவிட்டார், மண்ணைக் கவ்விவிட்டார். இனி கர்நாடக வாக்காளர்களுக்கு யோகியின் தொந்தரவு இருக்காது" எனக் கூறியிருந்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close