[X] Close

திமுகவுடன் கூட்டணி கிடையாது; ஆனால் காங்., கூட்டணியை பரிசீலிப்பேன்!- கமல் பளிச்


no-ties-with-dmk-kamalhassan

  • பாரதி ஆனந்த்
  • Posted: 13 Oct, 2018 10:44 am
  • அ+ அ-

எதிர்வரக்கூடிய தேர்தல்களில் திமுக, அதிமுக, பாஜகவுடன் கூட்டணி கிடையாது என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். ஆனால் காங்கிரஸ் கூட்டணி பரிசீலிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.

திமுகவும் - காங்கிரஸும் கூட்டணியில் உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளில் ஒன்றை ஒதுக்கு ஒன்றை தூக்கி கமல் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல்,  தமிழக அரசியலில் மாற்ற வர வேண்டும் என்றால் அதிமுக, திமுக இரண்டுமே அகற்றப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு நிச்சயமாக என பதிலளித்தார்.

மேலும், மக்கள் நீதி மய்யம் சந்திக்கும் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி இருக்காது எனவும் தெரிவித்தார்.

காங்கிரஸ் கூட்டணி குறித்த கேள்விக்கு, "தெரியவில்லை. அதை அவர்களிடம்தான் பேசிப் பார்க்க வேண்டும்.  தமிழக மக்களுக்கு என்ன நலன் செய்வீர்கள் என்று கேட்பேன். ஏனெனில் இதுவரை அவர்கள் செய்ததெல்லாம் மிகக் குறைவாகவே இருக்கிறது" என்றார்.

மேலும் பேசும்போது, "சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதன் மூலம், அங்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கல்லூரிகளில் அரசியல் பேசுவது குற்றமல்ல. மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இருக்கிறது. அனைத்துக் கட்சிகளும் கல்லூரிகளில் அரசியல் பேசினாலும் தவறில்லை.

கல்லூரிகளுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ள ரகசிய சுற்றறிக்கையில் நடிகர்களை உள்ளே அனுப்பாதீர்கள் என்று கூறி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆனால், அரசியல் பேச அனுமதிக்காதீர்கள் என்று அரசாணை அனுப்பிவிட்டு, மறுநாள் முதல்வரே ஒரு கல்லூரியில் அரசியல் பேசுகிறார்.

இவ்வாறு கமல் பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close