[X] Close

தமிழகத்தில் 67 ஆயிரம் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள்: பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் தகவல்


bjp-starts-their-election-work

  • kamadenu
  • Posted: 13 Oct, 2018 10:16 am
  • அ+ அ-

நீலகிரி மாவட்டத்தில் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நியமிக்கும் ஆலோசனைக் கூட்டம், உதகையில் நேற்று நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ் கூறும்போது, ‘தமிழகத்தில் 67 ஆயிரம் பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. கரூர், பொள்ளாச்சியை அடுத்து உதகை வந்துள்ளோம். மோடி ஆட்சியை பலரும் பாராட்டுகிறார்கள். இதனால், கல்லூரி இளைஞர்கள் அதிகளவில் பாஜகவில் சேர்கின்றனர். பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசிடம் இல்லை. ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை குறையும். பாஜக ஆளும் மாநிலத்தில் லிட்டருக்கு ரூ.5 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய பாஜகவின் திட்டங்களை தங்களுடைய திட்டம் என்று கூறி, மக்களை தமிழக அரசு ஏமாற்றி வருகிறது.

இது குறித்து மோடியிடம் கூறுவோம். காங்கிரஸ் கட்சி கமிஷன் வாங்கியே பாதுகாப்பு துறைக்கு தேவையான ஆயுதங்களை வாங்கியது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக கமிஷன் கிடைக்காத விரக்தியில் ஊழல் என்று பேசுகின்றனர்' என்றார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close