[X] Close

தினகரன், அழகிரி கள்ளக்கூட்டணி; அமைச்சர் உதயகுமார் சொல்கிறார்


dinakaran-azhairi

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

  • வி.ராம்ஜி
  • Posted: 12 Oct, 2018 20:20 pm
  • அ+ அ-

அதிமுகவால் ஓரங்கட்டப்பட்ட தினகரனும் திமுகவால் கழற்றிவிடப்பட்ட அழகிரியும் ஒரு கள்ளக்கூட்டணி வைத்துக்கொண்டு, இடைத்தேர்தல்களைச் சந்திக்கத் தயாராகியிருக்கிறார்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இதுகுறித்து விழா ஒன்றில் பேசும்போது தெரிவித்ததாவது:

அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவி கூட இல்லாமல் இருக்கிறார் டிடிவி.தினகரன். அதேபோல, எவ்வளவோ கெஞ்சியும் திமுகவில் ஒரு அடிப்படை உறுப்பினராகக் கூட அழகரியால் முடியவில்லை. இந்த இரண்டுபேருமே ஓரங்கட்டப்பட்டிருக்கிறார்கள்.

இப்போது தினகரனும் அழகிரியும் ஒரு கள்ளக்கூட்டணி வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதாவது திருவாரூர் இடைத்தேர்தலில் அழகிரியை ஜெயிக்க வைக்க தினகரன் ஒத்துழைப்பார். அதேபோல் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தினகரனை ஜெயிக்க வைக்க, அதாவது தினகரன் நிறுத்தும் நபரை ஜெயிக்க வைக்க, அழகிரி முழு ஒத்துழைப்பும் கொடுப்பார்.

இப்படியான கள்ளக்கூட்டணி குறித்து பேச்சு அடிபடுகிறது.

இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close