[X] Close

சசிகலா அதிமுகவில் உரிமை கொண்டாட முடியாது!- ஓ.எஸ்.மணியன்


os-manian-on-sasikala-counsels-affidavit

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Oct, 2018 12:58 pm
  • அ+ அ-

வேறொரு தனிக் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் 'சின்னம்மா' சசிகலா அதிமுகவில் உரிமை கொண்டாட முடியாது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசும்போது, "அமமுக என்ற கட்சியில் 'சின்னம்மா' பொதுச் செயலாளராக இருக்கிறார். அந்தக் கட்சிக்கு தனி கொடி இருக்கிறது. தனி சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஒரு கட்சிக்கு பொதுச் செயலாளராக ஆன பிறகு தாய்க் கட்சியில் உரிமை கொண்டாட முடியாது என்பது அதிமுக சட்ட விதி. அதிமுகவில் உறுப்பினராக, பொறுப்பில் இருப்பவர், வேறு சாதி இயக்கத்திலோ அல்லது வேறு கட்சியிலோ பொறுப்பில் இருக்கிறார் என்றால் அவர் அதிமுகவின் உறுப்பினர் அடையாளத்தை இழந்து விடுவார். எனவே, வேறு கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் 'சின்னம்மா' சசிகலா அதிமுகவில் உரிமை கொண்டாட முடியாது.

உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால், வைகோ திமுகவை விட்டு வெளியே சென்று கட்சி ஆரம்பித்தார் அவர் இப்போது திமுகவில் உரிமை கொண்டாட முடியாது அல்லவா. அதுபோன்றுதான் இதுவும்" என்றார்.

முன்னதாக அதிமுக கட்சி விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என்றும் அடிப்படை உறுப்பினர்களைக் கொண்டு பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் கேசி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சசிகலா தரப்பில் தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான கேள்விக்கே ஓ.எஸ்.மணியன் மேற்கூறிய பதிலை அளித்திருக்கிறார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close