[X] Close

 பழநியில் தி.மு.க., அ.ம.மு.க. வினரின்  வேட்புமனுக்களை கிழித்தெறிந்த அதிமுகவினர்


admk-issue-at-palani

  • kamadenu
  • Posted: 09 Oct, 2018 15:31 pm
  • அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம், பழநி யில் நடைபெற்ற கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் அ.ம.மு.க., தி.மு.க.வினரின் வேட்புமனுக் களை அ.தி.மு.க.வினர் கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பழநியில் உள்ள வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு உற்பத்தி சங்கத்தில் இயக்குநர்களை தேர்வு செய்ய அக்டோபர் 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற்றது. இதில் அதிமுக, அமமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.

அப்போது அங்கு வந்த அதிமுக நகர் செயலாளர் முருகானந்தம் தலைமையிலான அதிமுகவினர் தேர்தல் அலுவலர் மேசையில் இருந்த பிற கட்சிகளை சேர்ந்த வர்களின் வேட்புமனுக்களை கிழித்து எறிந்தனர். அறையில் இருந்து நாற்காலிகளையும் தூக்கி வீசிவிட்டு வெளியேறினர். இதை அறிந்த அமமுக, திமு கவினர் தேர்தல் அலுவலரை முற்றுகையிட்டனர்.

இதுபற்றி எதிர்க்கட்சியினர் கூறுகையில், ஆளும்கட்சியினர் தோல்வி பயத்தில் இதுபோன்று செய்கின்றனர். பழநி பகுதியில் நடக்கும் கூட்டுறவுத் தேர்தல்களில் அதிமுகவினர் இது போன்று செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என் றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close