[X] Close

எதுக்கெடுத்தாலும் என்னையும் எச்.ராஜாவையும் ஏன் கைது செய்யலைன்னு கேக்கறாங்க? - எஸ்.வி.சேகர் கிண்டல் ட்வீட்


sve-shekar-tweet

  • பாரதி ஆனந்த்
  • Posted: 09 Oct, 2018 14:51 pm
  • அ+ அ-

 எச்.ராஜா, எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை? என எதற்கெடுத்தாலும் கேட்பது ஒரு நோய். இந்த நோய் வரும் மே மாதம் சரியாகிவிடும் எனக் கூறியிருக்கிறார் எஸ்.வி.சேகர். 

மூத்த பத்திரிகையாளரும் நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியருமான நக்கீரன் கோபால், சென்னை விமானநிலையத்தில் இருந்து புனே செல்வதற்காக விமான நிலையம் வந்தார். அப்போது அவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த புகாரை அடுத்து, நக்கீரன் கோபாலை கைது செய்ததாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் நக்கீரன் கோபாலை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார். செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், எச்.ராஜா, எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை என வினவினார்.

இதனை சுட்டிக்காட்டி ட்வீட் செய்துள்ள எஸ்.வி.சேகர், "சிலர் பேட்டியைத் துவங்கு முன், என்ன கேள்வி என கேட்டுக்கொண்டு பின் பதிலளிப்பார்கள். இவரோ என்ன கேள்வி கேட்டாலும் H Raja , SVE Shekher ஐ ஏன் இன்னும் கைது பண்ணலன்னு பதில் கேள்வி கேட்டுட்டுதான் பேச ஆரம்பிப்பாராம். இது ஒரு PHOBIA.  வரும் மே மாதம் சரியாகிவிடும். God Bless" எனப் பதிவிட்டிருக்கிறார்.

பெண் பத்திரிகையாளர்களை இழிவாகப் பேசியதாக பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதேபோல், உயர் நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீதும் வழக்கு உள்ளது. அவருக்கு எதிராகவும் கைது வாரண்ட் இருக்கிறது.
இந்த இருவரும் இதுவரை கைது செய்யப்படாதது குறித்து அவ்வப்போது கேள்வி எழுந்துவருகிறது. இந்நிலையில்தான் எஸ்.வி.சேகர் இப்படி ஒரு ட்வீட்டைப் பதிவிட்டிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் மே மாதத்துடன் இந்த ஃபோபியா முடிவுக்கு வரும் என்று கூறியிருப்பது நாடாளுமன்றத் தேர்தலை கவனத்தில் வைத்தே எனக் கூறப்படுகிறது.

இரண்டாவதாக பதிவு செய்த ட்வீட்டில், "“தன் வினை தன்னைச்சுடும்”. “தெய்வம் நின்று கொல்லும்”. “தீதும் நன்றும் பிறர் தர வாரா”. “சொந்தக் காசுல சூன்யம்”. இன்றய அரசியல் பலா பலன்கள். யாருக்கு எதுன்னு சொல்லுங்க" என்றும் பதிவிட்டிருக்கிறார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close