[X] Close

ஜனநாயகத்தின் குரல்வளையில் கால்வைப்பதற்கு சமம்: நக்கீரன் கோபால் கைதுக்கு கமல் கண்டனம்


kamal-press-release-about-gopal-arrest

  • kamadenu
  • Posted: 09 Oct, 2018 14:22 pm
  • அ+ அ-

ஜனநாயகத்தின் குரல்வளையில் கால்வைப்பதற்கு சமம் என்று நக்கீரன் கோபால் கைதுக்கு கமல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளரும் நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியருமான நக்கீரன் கோபால், சென்னை விமானநிலையத்தில் இருந்து புனே செல்வதற்காக விமான நிலையம் வந்தார். அப்போது அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த புகாரை அடுத்து, நக்கீரன் கோபாலை கைது செய்ததாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் மீது 124 இந்தியத் தண்டனைச் சட்டம் எனும் பிரிவில் வழக்குப் பதிந்துள்ளதாகத் தெரிகிறது. 

நக்கீரன் கோபால் கைதுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மக்கள் சுதந்திரம் எப்போதெல்லாம் பாதிப்புக்குள்ளாகிறதோ அப்போதெல்லாம் அதை சீர்படுத்தும் மாண்பு ஊடகங்களுக்கே உள்ளது.அந்த ஊடகங்களின் சுதந்திரத்தில் கைவைப்பது என்பது ஜனநாயகத்தின் குரல்வளையில் கால்வைப்பதற்கு சமமாகும்.

ஆங்கிலேயர் காலத்து ‘வாய்ப்பூட்டுச் சட்டம்’ தற்பொழுது வேறு வடிவத்தில் இந்த அரசால் செயல்படுத்தப்படுகிறது. ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால் மிக முக்கியமாக ஊடக சுதந்திரம் காக்கப்படவேண்டும். நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதை மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close