[X] Close

ஒரு அறிக்கையைக் கூட புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லையா?- டிடிவி சாடல்


ttv-slams-tks-elangovan

  • பாரதி ஆனந்த்
  • Posted: 09 Oct, 2018 09:25 am
  • அ+ அ-

தனது கட்சி தலைவரின் அறிக்கையைக் கூட புரிந்து கொள்ளும் ஆற்றல் இளங்கோவனுக்கு இல்லையா? என சாடியிருக்கிறார் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சித் தலைவர் டிடிவி தினகரன்.

முன்னதாக தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த இளங்கோவன், "திருப்பரங்குன்றத்தில் தங்களது வேட்பாளர் ஜெயித்ததாக நீதிமன்ற தீர்ப்பு வந்தால், அங்கு இடைத்தேர்தலுக்கே வேலையில்லை என்றும் இதை புரிந்து கொள்ளும் ஆற்றல் தினகரனுக்கு இல்லையா?" என்று கேட்டிருந்தார்.

இதனை சுட்டிக் காட்டி ட்வீட் செய்துள்ள டிகேஎஸ் இளங்கோவன், "திமுக அமைப்புச்செயலாளர் நண்பர் டிகேஎஸ் இளங்கோவன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திருப்பரங்குன்றத்தில் தங்களது வேட்பாளர் ஜெயித்ததாக நீதிமன்ற தீர்ப்பு வந்தால், அங்கு இடைத்தேர்தலுக்கே வேலையில்லை என்றும் இதை புரிந்து கொள்ளும் ஆற்றல் தினகரனுக்கு இல்லையா என்றும் கேட்டுள்ளார்.

நண்பர் முதலில் தனது கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் நேற்று கொடுத்துள்ள அறிக்கையை படித்துப் புரிந்து கொள்ள முயல வேண்டும். 
5 மாநிலங்களுக்கும், இடைத்தேர்தலைச் சந்திக்கும் கர்நாடகாவுக்கும், தேர்தல் தேதிகளை அறிவித்த தேர்தல் ஆணையம், திருப்பரங்குன்றம் திருவாரூர் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்காததன் உள்நோக்கம் என்ன என்று திருப்பரங்குன்றத்தை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார். 

அதனால் தான், இன்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, இவ்வாறு இரட்டை நிலை எடுத்தால், அரசியல்வாதிகள் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்று கூறினேன். தனது கட்சி தலைவரின் அறிக்கையைக் கூட புரிந்து கொள்ளும் ஆற்றல் இளங்கோவனுக்கு இல்லையா?" என வினவியுள்ளார்.

அண்மையில் வெளியிடப்பட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுடன் திருப்பரங்குன்றம், திருவாரூர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அறிவிப்பு வெளியாகவில்லை. தமிழக தலைமைச் செயலாளரின் கோரிக்கையை ஏற்று பருவமழையால் தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனை திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்த்து வருகின்றன.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close