[X] Close

டெல்லிக்கு ஏஜென்டாக இருந்ததால்தான் ஓபிஎஸ்-ன் முதல்வர் பதவி பறிக்கப்பட்டது: டிடிவி.தினகரன் தகவல்


ttvdinakaran-speech-at-senthil-balaji-protest

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் அமமுக சார்பில் நேற்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசுகிறார் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன். உடன், முன்னாள் அமைச்சர்கள் வி.செந்தில்பாலாஜி, பழனியப்பன் | படம்: க.ராதாகிருஷ்ணன்

  • kamadenu
  • Posted: 09 Oct, 2018 09:06 am
  • அ+ அ-

டெல்லிக்கு ஏஜென்டாக பணிபுரிந்த காரணத்தால்தான் ஓபிஎஸ்-ன் முதல்வர் பதவி பறிக்கப்பட்டது என அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி புஞ்சை தோட்டக்குறிச்சி, புஞ்சை புகழூர், காகிதபுரம் பேரூராட்சிகள், கரூர் ஒன்றியத்தில் உள்ள 4 ஊராட்சிகளுக்காக 2017-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி சட்டப்பேரவையில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அமமுக சார்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் வேலாயுதம்பாளையத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

கொட்டும் மழையில் இதில் பங்கேற்ற டிடிவி.தினகரன் உண்ணாவிரதத்தில் பேசியபோது, "டெல்லிக்கு ஏஜென்டாக புணிபுரிந்த காரணத்தால்தான் ஓபிஎஸ் முதல்வர் பதவியில் இருந்து இறக்கப்பட்டார். தற்போது தமிழகத்தில் ஆட்சி நடத்துகிறவர்கள் மக்களுக்காக ஆட்சி நடத்தவில்லை. தங்களின் உறவினர்களுக்காக ஆட்சி நடத்துகின்றனர். விரைவில் நமது தலைமையில் யாருக்காகவும், எதற்காகவும் எந்த சமரசமும் செய்து கொள்ளாத அம்மா ஆட்சி அமையும்" என்றார்.

முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஸ்லிப் ஆகப்போகிற செல்

முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் நேற்று டிடிவி.தினகரன் அளித்த பேட்டி:

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஸ்லீப்பர் செல் அல்ல, ஸ்லிப் ஆகப்போற செல். நான் திருந்திவிட்டேனா என அறிந்து கொள்வதற்காக ஓ.பன்னீர்செல்வம் என்னை பார்க்க வந்ததாக கூறுகின்றார். அவர் என்ன புத்தரின் பேரனா? எல்லோருக்கும் ஆசீர்வாதம் வழங்கி, திருந்திவிட்டனரா என சோதனை செய்வதற்கு?

முதல்வராக இருந்தவரை அடித்து, உதைத்து கட்டாயப் படுத்தி டிடிவி.தினகரன் கடிதம் வாங்கினார் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியிருந்தார். அப்படி நடந்திருந்தால் அவர் மீண்டும் என்னை சந்திக்க வந்திருப்பாரா? இதெல்லாம் பொய்.

பாஜகவுடன் கூட்டணி அமைக்க தினகரன் கட்சி நிர்வாகிகள் தூதுவிட்டதாக பாஜக மாநிலச் செயலாளர் தமிழிசை கூறியுள்ளார். கிணற்றில் விழுந்து தற்கொலை செய்வதற்கு நாங்களாக ஏன் முயற்சிக்க வேண்டும் என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close