[X] Close

கெட்டவார்த்தை பேசுறார்; லஞ்சம் தரேன்னு சொல்றார்! எச்.ராஜா மீது நடவடிக்கை உண்டா? - தமிழிசைக்கு கஸ்தூரி கேள்வி


hraja-kasthuri

நடிகை கஸ்தூரி

  • kamadenu
  • Posted: 16 Sep, 2018 13:01 pm
  • அ+ அ-

நீதிமன்றத்தை கெட்டவார்த்தை சொல்லித் திட்டுகிறார். காவல்துறைக்கு லஞ்சம் தருகிறேன் என்று சொல்கிறார். விமானத்தில் கோபப்பட்டு அந்தப் பெண் மீது வழக்கு போட்ட தமிழிசை, எச்.ராஜா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என நடிகை கஸ்தூரி, கேள்வி எழுப்பி உள்ளார்.

சமூகவலைத்தளத்தில் காவல்துறை அதிகாரிகளிடம் பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா பேசும் வீடியோ பதிவொன்று வைரலாக பரவி வருகிறது. அதில் “பயங்கரவாதிகளுக்கு ஜெயிலுக்குள் 19 கலர் டிவி, வெட்கமில்லையா உங்களுக்கு காக்கிசட்டை அணிவதற்கு. வெட்கமாயில்லை. ஒட்டுமொத்த காவல்துறையுமே  தமிழ்நாட்டில் ஊழல்மயமாகிவிட்டது” என்று காவல்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார் எச்.ராஜா.

அப்போது ஒரு காவல்துறை அதிகாரி, “இது ஹைகோர்ட் உத்தரவு சார்” என்றவுடன், எச்.ராஜா தகாத வார்த்தைகளால் ஹைகோர்ட்டை சாடியுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது ட்விட்டர் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

எச்.ராஜா பேச்சுக்கு பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். 

எச்.ராஜா குறித்து கஸ்தூரி ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவு இதோ...  

எவ்வளவு கோபம் வந்தாலும் பொதுவெளியில் பேசும் முறை தவறக்கூடாது. நீதிமன்றத்தை கெட்ட வார்த்தையால் திட்டுவது, போலீசுக்கு லஞ்சம் தருகிறேன் என்று சொல்லுவது... மலிவாய் பேசுவதில் H ராஜா அவர்களுக்கே இது ஒரு புதிய மைல் கல்.

விமானத்தில் தவறாக செயல்பட்டவர் மீது போலீஸ் புகாரளித்த தலைவி தன் கட்சிக்காரரின் நடத்தைக்கு என்ன செய்யப் போகிறார்? நீதிமன்றமும் போலீசும் வேடிக்கை பார்க்கப் போகிறதா?

இவ்வாறு நடிகை கஸ்தூரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close