[X] Close

எச்.ராஜா மீது நடவடிக்கை? - அமைச்சர் ஜெயக்குமார் பதில்


hraja-jeyakumar

அமைச்சர் ஜெயக்குமார் - எச்.ராஜா

  • வி.ராம்ஜி
  • Posted: 16 Sep, 2018 12:45 pm
  • அ+ அ-

சமூகவலைத்தளத்தில் காவல்துறை அதிகாரிகளிடம் பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா பேசும் வீடியோ பதிவொன்று வைரலாக பரவி வருகிறது. அதில் “பயங்கரவாதிகளுக்கு ஜெயிலுக்குள் 19 கலர் டிவி, வெட்கமில்லையா உங்களுக்கு காக்கிசட்டை அணிவதற்கு. வெட்கமாயில்லை. ஒட்டுமொத்த காவல்துறையுமே  தமிழ்நாட்டில் ஊழல்மயமாகிவிட்டது” என்று காவல்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார் எச்.ராஜா.

அப்போது ஒரு காவல்துறை அதிகாரி, “இது ஹைகோர்ட் உத்தரவு சார்” என்றவுடன், எச்.ராஜா தகாத வார்த்தைகளால் ஹைகோர்ட்டை சாடியுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது ட்விட்டர் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

எச்.ராஜா பேச்சுக்கு பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். 

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்ததாவது:

நீதித்துறை பற்றியும் காவல்துறை பற்றியும் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியிருக்கிறார். நீதித்துறை குறித்து அவர் பேசிய மோசமான கருத்துகளுக்கு, நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு தொடுக்கும் என நம்புகிறேன்.

அதேபோல், பகலென்றும் இரவென்றும் பாராமல், சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் வைத்துப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள் காவல்துறையினர். அவர்களை, மிக மோசமான வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார் எச்.ராஜா. அவர் மீது எதுமாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.  

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close