[X] Close
 

நாங்க ரெடி... நீங்க ரெடியா? - ஸ்டாலின் பேச்சுக்கு தமிழிசை பதிலடி


dmk-bjp

மு.க.ஸ்டாலின் - தமிழிசை செளந்தரராஜன்

  • kamadenu
  • Posted: 16 Sep, 2018 11:38 am
  • அ+ அ-

மத்திய அரசு குறித்த ஸ்டாலின் பேச்சுக்கு, ”நாங்கள் தயார்... நீங்கள் தயாரா” என்று கேட்டுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.

 விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக-வின் முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் “கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்திற்கு செய்தது என்ன?” என்று தன்னுடைய பேச்சில் கேள்வி எழுப்பினார்.  

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

4 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக அரசு என்ன செய்தீர்கள் என கேட்கும் ஸ்டாலின் அவர்களே! நீங்கள் மத்தியில் ஆண்ட 10 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில திமுக தமிழகத்திற்கு செய்த துரோகப் பட்டியல் இதோ!

தீராத மின்வெட்டு , காவிரி , மீனவர்கள், இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் , காங்கிரசின் ஊழல் பங்காளிகள்.  

4 ஆண்டுகளில் தமிழகத்திற்கு கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட நாங்கள் தயார். 10 ஆண்டுகளில் திமுக -காங் கூட்டணி ஆட்சியில் கொண்டு வந்த பெரிய திட்டங்களை நீங்கள் பட்டியலிட்டு விட்டு (ஒன்றுமில்லை என நீங்களே அறிவீர்கள்) எங்களிடம் கேளுங்கள் பதில் சொல்கிறோம். நாங்க ரெடி. நீங்க ரெடியா?

இவ்வாறு தமிழிசை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close