[X] Close
 

மாமனார் வீடாகிருச்சு சிறை! - பொன்.ராதாகிருஷ்ணன் கிண்டல்


jail-ponradha

  • வி.ராம்ஜி
  • Posted: 16 Sep, 2018 11:18 am
  • அ+ அ-

தமிழகச் சிறைகள், கைதிகளுக்கு மாமனார் வீடு மாதிரி இருக்கின்றன என்று மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசியதாவது:

தமிழகத்தில், சிறைத்துறை என்பது இப்போது வேறுமாதிரியாகிவிட்டது. சிறைகள், கைதிகளுக்கு மாமனார் வீடு மாதிரி ஆகிவிட்டிருக்கின்றன. அங்கு சகல வசதிகளுடனும் கைதிகள் சொகுசாக இருக்கிறார்கள்.

முக்கியமாக, பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், மிகப்பெரிய குற்றவாளிகள் என சிறைத்தண்டனை அனுபவிக்கும் பலரும் சிறைக்குள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் சொகுசாக வாழ்ந்து வருகின்றனர்.

இப்படியெல்லாம் நடப்பதற்கு துணை போகும் அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்ட் செய்து, அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும். அப்போதுதான் சிறைத்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close