[X] Close

அதிமுகவில் இணைவதற்கு தூது அனுப்பினேனா? - தங்கதமிழ்ச்செல்வன் பதில்


thanga-tamilselvan-reply-about-joining-admk

  • kamadenu
  • Posted: 15 Sep, 2018 12:14 pm
  • அ+ அ-

அதிமுகவில் இணைவதற்குப் பதிலாக மொட்டைக் கிணற்றில் விழுந்துவிடலாம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொள்கை பரப்புச் செயலாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் தேனியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

அதிமுகவில் சேர தங்கத் தமிழ்செல்வன் தூதுவிடுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஆனால் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வெற்றி பெறும். அவ்வாறு வெற்றி பெற்றால் அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் எங்களிடம் ஒப்படைத்துவிட்டு முக்கியப் பொறுப்பாளர்கள் விலகிக் கொள்ள வேண்டும். அமமுக தோற்றால் நாங்கள் அனைவரும் அதிமுகவில் இணைந்துவிடுகிறோம் என்று தான் கூறினேன்.

எனது சவாலை புரிந்து கொள்ளாமல் கடம்பூர் ராஜூ குழம்பிப்போய் உள்ளார். நான் அதிமுகவில் இணைய தூது விடுவதாகக் கூறுகிறார். தற்போதைய அதிமுகவில் இணைவதற்குப் பதிலாக மொட்டைக் கிணற்றில் விழுந்துவிடலாம். எனவே, என் கருத்தைப் புரிந்து கொண்டு பேசுவது தான் கடம்பூர் ராஜூவின் அமைச்சர் பதவிக்கு அழகு.

அதிமுகவில் யாருக்கும் தலைமைப் பண்பு கிடையாது. தலைவர்கள் பேச்சை யாரும் கேட்பதில்லை.

அதனால் தான் அமைச்சர்களும், சட்டப் பேரவை உறுப்பினர்களும் மேடைகளில் உளறுகின்றனர். மின்வெட்டை சரி செய்வதற்குப் பதிலாக தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி கொடுப்பதிலேயே மின்துறை அமைச்சர் தீவிரமாக உள்ளார்.

மக்களுக்கான திட்டங்களை செய்வதில்லை. எனவே தற்போதைய அதிமுக அரசை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டிருப்பதைப்போல தமிழ்நாட்டிலும் குறைக்க வேண்டும் என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close