[X] Close
 

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்கிறது: ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு 


evks-elangovan-speech

  • kamadenu
  • Posted: 15 Sep, 2018 11:09 am
  • அ+ அ-

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடரும் நிலையில், தமிழக முதல்வரும், மின் துறை அமைச்சரும் பொய்யான தகவலைத் தெரிவித்து வருகின்றனர் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

ஈரோட்டில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரபேல் போர் விமானத்தை அதிக விலை கொடுத்து மத்திய அரசு வாங்கு கிறது. இதன்மூலம் ஊழல் நடந்துள்ளது. விமானம் வாங்க அதிகமாக செலுத்தும் தொகை லஞ்சமாக ஆட்சியாளர்களுக்கு வரப்போகிறது. ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம் என்று ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடியின் ஆட்சியில், ராணுவத் தளவாடங்கள் வாங்குவதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இவர்களின் சுயரூபத்தை எடுத்துச் சொல்வதற்காக நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது.

ரபேல் விமானத்திற்கு என்ன சக்தி உள்ளது, அது எவ்வளவு உயரத்திற்கு பறக்கும் என்பது போன்ற தொழில்நுட்ப விவரங்களைத்தான் வெளியில் தெரிவிக்கக் கூடாது. அதனை என்ன விலைக்கு வாங்கினோம் என்பதைக் கூட சொல்ல முடியாது என ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி வருகிறார். ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் மன்னித்து விட்டனர். இனிமேல் தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும். சிறைத்துறை யில் இப்போது வசதிகள் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, புழல் சிறையில் மெத்தை, குளிர்சாதன வசதிகளோடு, சமையல் செய்வதற்கு எல்லா பாத்திரங்களும் வைத்திருக்கிறார்கள்.

குட்கா ஊழலில் யார் நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அவர்களே குற்றம் செய்துள்ளனர். குட்கா ஊழல் முறைகேடு குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்கள். இது போன்ற வழக்குகளில் விரைவில் எல்லா அமைச்சர்களும் சிறைக்குச் செல்வது உறுதி.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பல இடங்களில் நிலவுகிறது. கிராமங்களில் 6 மணி நேரம் வரை மின் வெட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வரும், மின் துறை அமைச்சரும் பொய்யான தகவலை பொதுமக்களுக்குத் தெரிவித்து வருகின்றனர், என்றார்.

[X] Close